Showing posts with label விநோதம். Show all posts
Showing posts with label விநோதம். Show all posts
3 Jan 2021
20 Nov 2018
ஊருக்கு போன பொண்டாட்டியை காணோமே.. என்னாது நான் 5-வது புருஷனா.. ஒரு அதிர்ச்சி கதை
5- வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது!- வீடியோ திருமலை: 5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ராமகிருஷ்ணாவிற்கும் கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி மகள் மோனிகாவுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே பெண்ணின் அப்பா, மாப்பிள்ளையிடம், "மகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா" என்று கேட்டார். மகளை பிரிந்த பாசத்தில் அப்பா இப்படி கேட்கிறார் என நினைத்து மாப்பிள்ளையும் மோனிகாவை அவர் அப்பாவுடன் அனுப்பி வைத்தார்.
18 Nov 2018
ஓடி வந்த பெண்.. தாவி வந்து உதட்டில் முத்தம் தந்த காட்டு ராஜா..
பார்சிலோனா: மொழி, இனம், உருவம் தாண்டி எல்லையில்லாமல் இன்றுவரை நம்மை விழ வைத்து கொண்டிருப்பது பாசம்... இதில் விழுந்துவிட்டால் மனிதன் என்ன? மிருகம் என்ன? ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் சிங்கத்தை வளர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இப்படி வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது உலகெங்கும் பொதுவான விதி. இந்த பெண் வீட்டில் சிங்கம் வளர்ப்பது அந்நாட்டு அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனால் வீட்டுக்கு வந்து, அந்த சிங்கத்தையும் பிடித்து கொண்டு போய் மிருக காட்சி சாலை கூண்டில் அடைத்துவிட்டது அரசாங்கம். சிங்கத்தை பிரிந்து அந்த பெண்ணாலும் இருக்க முடியவில்லை.. பெண்ணை பிரிந்து சிங்கத்தாலும் இருக்க முடியவில்லை.
பெண்களுக்கு பாலியல் தொல்லை.. ஆபாச மார்பிங் போட்டோக்கள் வெளியீடு.. இளைஞருக்கு மொட்டை
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக இணையத்தில் வெளியிட்ட இளைஞரை, ஊர்மக்கள் சேர்ந்து மொட்டை போட்டு கரும்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று தண்டனை அளித்துள்ளனர்.
1 Mar 2018
களுதாவளை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டொல்பின்
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் புதன்கிழமை (28) மாலை சிறிய டொல்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது.
29 Aug 2017
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை பார்வையிடும் நேரம் நீடிப்பு
தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலையைப் பார்வையிடும் எதிர்வரும் செப்ரெம்பெர் மாதம் 9ஆம் திகதியிலிருந்து தற்போதுள்ள கால அளவை விட 5 மணிநேரம் நீடிக்கப்படவுள்ளதாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் Minister of Sustainable Development and Wildlifeகாமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
22 Mar 2016
அதியசமான கன்று குட்டி
துறைநீலாவணை 7ம்வட்டாரத்தில் வசிப்பிடமாக கொண்ட இளையதம்பி தியாகராசா என்பர் வீட்டில் வளக்கும் மாடு அதியசமான கன்று ஒன்றை ஈன்றுள்ளது.
12 Feb 2016
16 Jan 2016
13 Nov 2015
17 Sept 2015
தேவியின் அழகை திறந்து பாருங்கள்
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை உள்நாட்டு உறவுகளையும் சுண்டி இழுக்கின்றது.
மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்த கிளி கைது
85 வயது மூதாட்டி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிளி ஒன்றை இந்திய பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
கடந்த இரு வருடங்களில் பல தடவைகள் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மூதாட்டி முறைப்பாடு செய்து உள்ளபோதிலும் விசாரணை நடத்த இப்போதுதான் அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர்.
5 Sept 2015
ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பெற்ற ஐரிஷ் சகோதரிகள்
அயர்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்துள்ளன. நான்காவது சகோதரி கர்ப்பமாக இருப்பதுடன் அவருக்கும் விரைவில் குழுந்தை பிறக்கவுள்ளது. இம்முன்று சகோதரிகளுக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாயோ நகரிலுள்ள காஸ்ட்லேபர் பிரதேசத்தின் மாயோ பொது மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அருகருகே வசித்த குறித்த சகோதரிகள் திட்டமிட்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை. தற்செயலாக இச்சம்பவம் நடந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது என்று அம்மருத்தவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அருகருகே வசித்த குறித்த சகோதரிகள் திட்டமிட்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை. தற்செயலாக இச்சம்பவம் நடந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது என்று அம்மருத்தவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
23 Jul 2015
15 Jul 2015
நடுவீதியில் மானை வேட்டையாடிய சிங்கம்
சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை தொலைக்காட்சியிலோ அல்லது திரையரங்குகளில் தான் பாத்திருப்போம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்துக் குதறி துவம்சம் செய்யும் காட்சி தென் ஆபிரிக்காவின் க்ரூகர் பார்க்கில் இடம்பெற்றது.
அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. கடந்த வெள்ளியன்று, சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் திடுதிடுவென சாலைக்குள் புகுந்து காரில் மோதியது.
ஐயோ பாவம் என்று அதைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கப் போன ஒருவரை பக்கத்தில் இருப்பவர் இழுத்து உள்ளே போட்டார்.
காரணம் அந்த மானை விரட்டியபடி, ஒரு சிங்கமும் வந்தது. அந்த சிங்கம் வந்து சரியாக மானைக் கடித்துக் குதறவும் இன்னொரு சிங்கமும் போட்டி போட்டுக் கொண்டு சாலைக்கு வர, சபாரி பயணம் மேற்கொண்ட பயணிகள் தங்கள் முன் நடந்த ரத்த வேட்டையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்.
26 May 2015
மேட்டுநிலப் பயிர்களை அழிக்கும் குரங்குள்.
8 May 2015
அதிசயம் ஆனால் உண்மை பூனைக்கு பால் கொடுக்கும் நாய்
அக்கரப்பத்தனை - ஆகுரோவா தோட்டத்தில் நாய் ஒன்று பூனைக் குட்டிக்கு பால்
கொடுக்கும் சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.
ஆகுரோவா தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் பாசமாக பூனையும் நாயும் வளர்த்து வருகின்றார். நாய் ஐந்தறிவு ஜீவனாக இருக்கின்ற போதும் தனது விலங்கினத்தைச் பூனைக் குட்டி பசியால் தவிக்கும் போது அதற்கு பாசத்துடன் பால் கொடுப்பது வியப்பு.
இந்தப் பண்பு ஆறறிவு படைத்த மனிதர்கள் இடையே காணப்படுவது மிகவும் குறைவே.
ஆகுரோவா தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் பாசமாக பூனையும் நாயும் வளர்த்து வருகின்றார். நாய் ஐந்தறிவு ஜீவனாக இருக்கின்ற போதும் தனது விலங்கினத்தைச் பூனைக் குட்டி பசியால் தவிக்கும் போது அதற்கு பாசத்துடன் பால் கொடுப்பது வியப்பு.
இந்தப் பண்பு ஆறறிவு படைத்த மனிதர்கள் இடையே காணப்படுவது மிகவும் குறைவே.
24 Apr 2015
பழுத்து பஞ்சாகியுள்ள இலவங் காய்கள்.
தற்போதைய வெயில் காலத்தில் இலவம் காய்கள் பழுத்து வெடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் புன்னக்குளம் பகுதியில் அமைந்துள்ள இலவ மரத்தின் காய்கள் பழுத்து வெடித்து பஞ்சாகியுள்ளதனை இங்கு அவதானிக்கலாம்.
இலவம் பஞ்சு தலையணை, மற்றும் மெத்தை போன்றன உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.
பூத்துக் குலுங்கும் வெண்தாமரைகள்
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிக் குளத்தில் வெண்தாமரைகள் பூத்துக் குலுங்குகின்றன.
வீதி ஓரத்தில் இக்குளம் அமைந்துள்ளதனால் இதனை மக்கள் பார்த்து இரசித்துச் செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது. இதனை விட ஆலய பூஜைகளுக்கும், இக்குளத்திலிருந்து வெண்தாரை மலர்களைப் பறித்துச் செல்கின்றனர்.