17 Sept 2015

மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்த கிளி கைது

SHARE
85 வயது மூதாட்டி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிளி ஒன்றை இந்திய பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
கடந்த இரு வருடங்களில் பல தடவைகள் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மூதாட்டி முறைப்பாடு செய்து உள்ளபோதிலும் விசாரணை நடத்த இப்போதுதான் அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர்.

மூதாட்டி கடந்து செல்கின்ற போதெல்லாம் அசிங்க வார்த்தைகளால் கிளி திட்டுகின்றது என்கிற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்று உள்ளது.
மூதாட்டிக்கும், மூதாட்டியின் பெறா மகனுக்கும் இடையில் சச்சரவு. பெறா மகனே கிளியை வளர்க்கின்றார். இவரே கிளிக்கு துஷ்பிரயோக வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து இருக்கின்றார்.
ஆனால் பெறா மகனுக்கு எதிராக மூதாட்டி முறைப்பாடு செய்யத் தவறியமைதான் புதிராக உள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: