13 Nov 2015

WT1190F´ வானில் வெடித்து சிதறியிருக்கலாம்

SHARE
இலங்கை கடற்பரப்பில் இன்று (13) விழும் என எதிர்வு கூறப்பட்ட ´WT1190F´ என்ற மர்மப்பொருள், பூமியை வந்தடைய முன்னர் வளிமண்டலத்திலேயே, வெடித்து சிதறியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்னவிடம் வினவியபோது மு.ப 11.45 மணியளவில் தெற்கு கடற்பிரதேசத்தில் இரு வெடிப்புச் சம்பவங்கள் ஒரே நேரத்தில் நடந்ததாக தனக்கு தகவல் கிடைத்தது என்று தெரிவித்தார்.
 மனிதனால் அனுப்பப்பட்ட ரொக்கேட் அல்லது 1960 அல்லது 70களில்  அனுப்பப்பட்ட அப்பலோ விண்கலத்தின் பகுதியே இவ்வாறு இலங்கையின் தெற்கு கடல் பிரதேசத்தில் விழும் மர்மப்பொருள் என்று நம்பப்படுகிறது.

குறித்த பொருளின் ஒரு பகுதி வானில் வெடித்து எரிந்து போனதுடன் மிகுதிப்பகுதி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது முழுமையாக எரிந்து போயிருக்கலாம் என்று இலங்கை இலங்கை கோள்மண்டல பணிப்பாளர் திருமதி பிரியங்கா கோரளகே அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: