10 Sept 2025

சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற றுத்றா அமிர்தரெத்தினம்.

SHARE

சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற றுத்றா அமிர்தரெத்தினம்.

இலங்கை மன்றக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குவியம் விருதுகள் 2025 விழாவில், மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையைச் சேர்ந்த நடிகை றுத்றா அமிர்தரெத்தினம் சிறந்த நடிகை விருதைப் பெற்றுள்ளார். அவரது “கைம்பெண்ணவள் திரைப்படத்தில் வெளிப்படுத்திய வலிமையான மற்றும் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, விமர்சகர்களாலும் பார்வையாளர்களாலும் பாராட்டப்பட்டு, இந்த உயரிய விருதை வென்றுள்ளார். 

றுத்றா அமிர்தரெத்தினம் திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல், பல்துறை ஆற்றல்களைக் கொண்டவர். இலங்கையின் ஒரே இளம் பெண் ஹரிகதா பிரசங்கக் கலைஞர் என்ற தனித்துவத்தை பெற்றிருக்கும் இவர், ஆன்மீக சொற்பொழிவாளர், ஊக்குவிப்பு பேச்சாளர், எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் தன்னை நிரூபித்து வருகின்றார். 

இதற்கு முன்னரும் 2023ஆம் ஆண்டு சென்னை நகரில் நடைபெற்ற விழாவில் சர்வதேச சாதனை பெண் விருது பெற்றார். அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு திருச்சியில், இலக்கியம் மற்றும் சமூகச் சேவைக்கான வெற்றித் தமிழிணி விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குவியம் விருதுகள் 2025 இல் சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கப் பெற்றமையானது  தனது கலைப்பயணத்தில் ஒரு புதிய அங்கீகாரத்தையும், திரைப்பட உலகில் தாம் மேலும் உயர்வதற்கான இடத்தையும் அடைந்துள்ளதாக றுத்றா அமிர்தரெத்தினம் தெரிவிக்கின்றார்.







 

SHARE

Author: verified_user

0 Comments: