Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

28 Jul 2020

நஸீர் அஹமட் உடனான நேர்காணல்

நஸீர் அஹமட் உடனான நேர்காணல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவரும், அக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் நஸீர் அஹமட் உடனான நேர்காணல்.

27 Jul 2020

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும், பொறியியலாளர் சிப்லி பாறுக் உடனான நேர்காணல் (வீடியோ)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும், பொறியியலாளர் சிப்லி பாறுக் உடனான நேர்காணல் (வீடியோ)

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும்,

26 Jul 2020

நாடாளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் அவர்களுடனான நேர்காணல்.(வீடியோ)

நாடாளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் அவர்களுடனான நேர்காணல்.(வீடியோ)

முன்னாள் அரசாங்க அதிபரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான மாணிக்கம் உதயகுமார் அவர்களுடனான நேர்காணல்.

24 Jul 2020

22 Jul 2020

11 May 2020

நேர்காணல் : ஜோதிட ரீதியாக கோரோனா நோய் தொடர்பில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், இந்துக்குருமார் அமைப்பின் உறுப்பினரும், சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்திக் குருக்களுடனான செவ்வி.(வீடியோ)

நேர்காணல் : ஜோதிட ரீதியாக கோரோனா நோய் தொடர்பில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், இந்துக்குருமார் அமைப்பின் உறுப்பினரும், சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்திக் குருக்களுடனான செவ்வி.(வீடியோ)

(வ.சக்தி)

நேர்காணல் : ஜோதிட ரீதியாக கோரோனா நோய் தொடர்பில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், இந்துக்குருமார் அமைப்பின் உறுப்பினரும், சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்திக் குருக்களுடனான செவ்வி.

12 Apr 2020

 நேர்காணல் : ஆச்சாரிய பண்டிதர், அருட் கவியரசு விஸ்வப்பிரமம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களுடனான செவ்வி.(வீடியோ)

நேர்காணல் : ஆச்சாரிய பண்டிதர், அருட் கவியரசு விஸ்வப்பிரமம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களுடனான செவ்வி.(வீடியோ)


(சக்தி)


ஆச்சாரிய பண்டிதர், அருட் கவியரசு விஸ்வப்பிரமம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களுடனான செவ்வி.

16 Nov 2018

கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரனுடானான செவ்வி.

கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரனுடானான செவ்வி.

கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரனுடானான செவ்வி.

20 Nov 2016

  கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான திட்ட முன்னனேற்ற ஆய்வு ஒன்றுகூடல்…

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான திட்ட முன்னனேற்ற ஆய்வு ஒன்றுகூடல்…

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் 2016 ஆம் ஆண்டுக்குரிய திட்ட முன்னேற்றம் சம்மந்தமான ஆய்வு ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் திருகோணமலை

5 Mar 2016

முன்னாள் பிரதியமைச்சரும், தற்போதைய வர்த்தக வணிகத் துறை அமைச்சின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பும் தொகுதி அமைப்பாளருமான, சோ.கணேசமூர்த்தியுடனான நேர்காணல்.

முன்னாள் பிரதியமைச்சரும், தற்போதைய வர்த்தக வணிகத் துறை அமைச்சின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பும் தொகுதி அமைப்பாளருமான, சோ.கணேசமூர்த்தியுடனான நேர்காணல்.

(நேர்கண்டவர் :  இ.சுதா)

இலங்கையில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே செய்பட்டுள்ளன. அந்த வகையில் அபிவிருத்தியின் செயற்பாடுகளை மேலோங்கச் செய்வதற்கு மக்களின் ஆதரவுகள் இன்றியமையாததாகும், அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களிலிருந்து தற்போது வரை அரசியலூடாக மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் அரசியல்வாதியினுடனான நேர்காணல்.

கடந்த 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசியல் யாப்பிற்கு அமைவாக பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு, மாவட்டத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியினை சந்தித்த போதிலும் அப்போது, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு குறுகிய காலத்தினுள் மட்டக்களப்பு மாவட்டத்தில், பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர் என்ற வகையில் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் வரவேற்பினை பெற்றிருக்கின்றீர்கள் இது இவ்வாறு இருக்க….

கேள்வி : - நீங்கள் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பாக கடந்த 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியினை சந்தித்த போதிலும் அன்றைய அரசாங்கத்தினால் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு எவ்வாறான வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்தீர்கள்.

பதில் : - அப்போது எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையால் தேர்தலில் தோல்வியினைச் சந்தித் போதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்களினால் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பிரதி அமைச்சர் பதவியினையும் பெற்று பல்வேறு பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தேன்.

அந்த வகையில் பல அதிகாரங்கள் எனக்கு அப்போது, வழங்கப்பட்டன. அதன் காரணமாக மாவட்ட இணைப்பாளர், மாத்திரமல்லாது புனர்வாழ்வு அமைச்சின் மாவட்ட இணைப்பாளராக, பிரதி அமைச்சராக வருவதற்கு முன்னரே நியமிக்கப்பட்டேன். அதன் மூலமாக தெளிவாக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் என்னால் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்தக் கூடிய நிலை உருவாகியது காரணம். பல்கலைக் கழக மட்டத்தில் மிகவும் மோசமான நிலைமை காணப்பட்டன. குறிப்பாக நிருவாக ரீதியான ஒழுங்கமைப்பினை மேற்கொள்ளும் நோக்கில் பேராசிரியர் இராஜேந்திரன் அவர்களை உப வேந்தராக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டதுடன், அவர் ஊடாக பல்கலைக் கழகத்தின் கட்டிட வசதிகள் தொடர்பான அறிக்கையினைப் பெற்று மகளிர் விடுதி மற்றும் தாவரவியல், இரசாயனவியல், தொடர்பான பீடங்களுக்கான கட்டிட வசதியினை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, 

அப்போதைய காலகட்டத்தில், மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி மூலமாக பட்ட முதுமாணி வழங்கக் கூடிய வகையில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகாரம் வழங்கப்பட வில்லை இதனால் நான்கு வருடங்கள் தமது கற்கை நெறியினை மாணவர்கள் பூர்த்தி செய்த நிலையிலும் ஆசிரியர் நியமனங்களைப் பெறுவதில் பாரிய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டன.

இவ்வாறான சூழ்நிலையில் அப்போதைய உயர்கல்வி அமைச்சராக இருந்த லக்மன் கிரியல்ல அவர்களுடன் கலந்துரையாடி நிலையிலும் தீர்வு கிடைக்கப் பெறவில்லை காரணம் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவிற்கு குறித்த விடயம் எம்மைப் பொறுத்த மட்டில் பெரிய விடயமாகத் தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்த வகையில் பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளாத போதிலும் தொடர்ச்சியான அழுத்தத்தினால் அமைச்சர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தார்.

கேள்வி : - நீங்கள் பிரதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் திருகோணமலை வளாகத்தினை கிழக்கு பல்கலைக் கழகத்துடன் இணைப்பதா றுகுணுப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதா என்று முரண்பாடுகள் ஏற்பட்டன இதனை நீங்கள் பிரதி அமைச்சர் என்ற வகையில் எவ்வாறு எதிர் கொண்டீர்கள்.

பதில் : - அக்கால கட்டத்தில் அரசாங்கத்தினால் முழு அதிகாரங்களும் எனக்கு வழங்கப்பட்டன இதன் காரணமாக உயர் கல்வி அமைச்சுடன் பேசி தீர்வினைப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டன. அத்துடன் பேராசிரியர் மகேந்திரன், பேராசிரியர் வரகுணம் ஆகியோர் மூலமாக அறிக்கையினைப் பெற்று பல்கலைக் கழக விடயம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டன. 

இதற்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் மூக்கையா மற்றும் முன்னர் பல்கலைக் கழகத்தின் உபவேந்தராக இருந்த இராஜேந்திரன் தனது பதவிக்காலம் முடிந்த நிலையிலும் பாரிய பங்களிப்புச் செய்தனர். இதன் பின்னர் எனது வேண்டுகோளின் பேரில் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உயர் கல்வி அமைச்சர் இந்திக்க குணவர்த்தன தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றன.

இதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலகரெத்தின உட்பட உபவேந்தர்கள் பீடாதிபதிகள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கலந்துலையாடலை மேற்கொண்டு பட்டியல் இடப்பட்ட பல பிரச்சினைகளுக்கு ஒரே தினத்தில் தீர்வு காணப்பட்ட போதிலும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் உருவாக்குவதற்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் இணக்கம் தெரிவிக்கப் படவில்லை காரணம் யாழ்பாணத்தில் மருத்துவ பீடம் உள்ளது.

என்ற ஒரே காரணத்தினால் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் தேவையில்லை என முன்மொழியப்பட்டன. இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சரிடம் கவனத்திற்கு கிழக்கு மாகாண மாணவர்கள் எதிர் கொள்கின்ற பயங்கரவாதம், போக்கு வரத்து தொடர்பான பிரச்சினையினைகள் முன்வைக்கப் பட்டமையினைத் தொடந்து மருத்துவ பீடம் ஆரம்பிப்பதற்கான அனுமதி பெறுவதற்கான இணக்கம் எட்டப்பட்டன.

கேள்வி : - நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டீர்கள் இருப்பினும் தேசிய கல்விக் கல்லூரி மட்டக்களப்பில் நிறுவுவதற்கு எவ்வாறான பங்களிப்பு உங்களால் வழங்கப்பட்டன.

பதில் : - எனது முயற்சியின் பலனாகவே மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் தேசிய கல்விக் கல்லூரி நிறுவப்பட்டது. அதனை யாரும் மறுக்க முடியாது. காரணம் கல்விக் கல்லூரியினை நிறுவுவதற்கான காணியினை தேர்ந்தெடுப்பதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டன. அப்போது கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாழங்குடாவில் கல்விக் கல்லூரி அமைப்பதற்கு பொருத்தமற்ற இடம் சத்துருக் கொண்டான் பிரதேசமே பொருத்தமானது என எதிர்ப்பினைக் காட்டினர். 

அதற்கான ஆதாரங்கள் என்னிடமுள்ளன. அபிவிருத்தியினை நோக்காகக் கொண்ட எனக்கு அவர்களின் எதிர்ப்பு பெரிதாகத் தென்படாத காரணத்தினால் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்ற பொறுப்பு என்னைச் சார்ந்தமையால் தாழங்குடா பிரதேசத்தில் கல்விக் கல்லூரியினை நிறுவுவதற்கான அனுமதியினைப் பெற்று உலக வங்கியின் நிதி உதவியுடன் பிரமாண்டமான கல்விக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.

கேள்வி : -  கல்வி தவிர்ந்த வேறு எவ்வாறான வேலைத்திட்டங்கள் உங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன? 

பதில் : - மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் நான் பிரதி அமைச்சராக இருந்த குறுகிய கால கட்டத்தில் பிரதேச மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக மகிழூர், களுதாவளை, புதுக்குடியிருப்பு, தேற்றாத்தீவு, போன்ற பிரதேசங்களில் கிராமிய வைத்தியசாலைகளை நிறுவியது மட்டுமல்லாது மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வசதிகளும் என்னால் செய்து கொடுக்கப்பட்டன. 

அத்துடன் பல இடங்களில் கலாசார மண்டபங்களை நிறுவியிருக்கின்றேன். பல பாடசாலைகள் தரமுயத்தப் பட்டிருக்கின்றன. பலருக்கு தொழில் வாய்ப்புக்களை  ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றேன். மட்டக்களப்பு நகர விஸ்தரிப்பு தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதனை செய்து முடிக்காத நிலை ஏற்பட்டது. எனது அபிவிருத்தியினை கணக்கிட முடியாது. முழு நேர அபிவிருத்தியில் ஈடுபட்டதுடன்  தற்போதும் அபிவிருத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி : -  மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் முழுமையாக அர்பணித்த நீங்கள் முன்னர் பொது ஜனஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் பிரதி அமைச்சராக இருந்து தற்போது நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியினை சந்தித்த போதிலும் வர்த்தக வணிக துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கின்றீர்கள் இதன் மூலமாக எவ்வாறான அபிவித்தியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தவுள்ளீர்கள்?

பதில் : - அபிவிருத்தி தொடர்பாக மாவட்டத்தினை பிரதி நிதித்துவப் படுத்துகின்ற இணைத் தலைவர்கள் கூடிய கவனம் செலுத்தினாலும் எனது அமைச்சின் ஊடாகவும் ஏனைய அமைச்சுக்களின் உதவியுடன் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். அபிவிருத்தி தொடர்பாக தீர்மானிப்பது இணைத் தலைவர்களைச் சார்ந்தது. இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களுடன் நேரில் கலந்துரையாடியிருக்கின்றேன். குறிப்பாக விவசாயம், மீன்பிடி, வீடமைப்பு வசதிகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கேள்வி : - மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான விதவைகள் காணப்படுகின்றனர் அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு எவ்வாறான திட்டங்களை வகுத்துள்ளீர்கள்? 

பதில் : - மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத் தொழில் பேட்டையினை அமைக்குமாறு பிரதமரிடன் கோரிக்கை விடுத்த போது எதிர் வரும் காலங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து பாரிய கைத்தொழில் மையங்களை மாவட்ட ரீதியாக நிறுவுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாக நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். அதன் ஊடாக பெருமளவானவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக பின்தங்கிய கிராமங்களில் பேதங்களை மறந்து சுகாதார மேம்பாட்டு திட்டங்களை துரிதமாகச் செயற்படுத்தப்படவுள்ளன. என அவர் தெரிவித்தார்.

3 Jan 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்காக வேண்டி கடந்த காலங்களிலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அகிம்சை ரீதியாகவும். ஆயதமேந்தியும் போராடி தற்போது அரசியல் ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு படிப்படியான தீர்வுகள் கிடைப்பதற்குரிய சமிக்ஞைகள் கிடைப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

4 Nov 2015

பிள்ளையானின் கைதானது ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு காய்நகர்த்தலாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியம். (நேர்காணல்)

பிள்ளையானின் கைதானது ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு காய்நகர்த்தலாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியம். (நேர்காணல்)

                                             (RTX)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேந்திரனுடன் ஒரு நேர்காணல்.

கேள்வி:- பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை   சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கைது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்:- உண்மையிலே இச்சம்பவமானது இவ் அரசாங்கத்தின் ஒரு கண்துடைப்பு செயலாகும். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை மையமாகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை பெற வேண்டுமாக இருந்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தென்பகுதி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க செய்ய வேண்டுமாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் மற்றும் ஏனைய குற்றங்களை   வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் பிள்ளையான் போன்றவர்கள் மூலம் செய்த கொலைகள் மற்றும் ஊழல்களை வெளியில் கொண்டு வந்து அவர்களின் வாக்கு வங்கியினை இல்லாமல் செய்வற்கான ஒரு காய்நகர்த்தலாகும். 

கேள்வி:- முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அண்மையில் ஊடகங்களுக்கு தன்னை யாருமே கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளமை தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் :- அவர் சொல்வதிலும் நியாயம் உள்ளது. ஏனென்றால் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை நடைபெற்ற காலத்தில் தான்       (வி.முரளிதரன்) இந்தியாவில் இருந்ததாக கூறினார். 2004ம் ஆண்டு காலப்பகுதியில் நாங்களும் கூட மட்டக்களப்புக்கு வர முடியாத நிலைமை. இந்திய அரசாங்கம் கருணா அம்மானை பயன்படுத்தியுள்ளது. இந்தியாவின் வழிநடத்தலில் தான் எந்தவொரு இலங்கை அரசாங்கமும்; இருந்தது. ஆகவே இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை, உண்மைகளை இவர் வெளிக்கொண்டு வரும் நிலைப்பாடும் உள்ளது. ஆகவே எழுந்தமானமாக இவர் கைது செய்யப்படமாட்டார். ஆனால் 700 பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகொலை சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்படலாம். 

கேள்வி:- முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் பாராளுமன்ற  உறுப்பினர் கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை தொடர்பில் தங்களுக்கும்(பா.அரியம்) தொடர்பு உள்ளது. ஆகவே தங்களையும் விசாரஷை செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். இது உண்மையா?

பதில் :- இது ஒரு பொய்ப்பிரச்சாரம். உண்மையிலே கிங்ஸிலி இராசநாயகம் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நான் பாராளுமன்ற உறுப்பினராகி விட்டேன். அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா பண்ணியதன் பின்னரே நான் அப்பதவிக்கு வந்தனே தவிர அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் நான் அப்பதவிக்கு வரவில்லை. இது பற்றி என்னை விசாரணை செய்ய வேண்டிய தேவைப்பாடும்  இருக்காது.

கேள்வி :- கிங்ஸிலி இரசநாயகம் அவர்களின் படுகொலைக்கு யார் காரணமாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில் :- உண்மையிலே அது பற்றி எனக்குத் தெரியாது. நான் அந்த காலகட்டத்தில் கொழும்பிலே இருந்தேன். விடுதலைப்புலிகள் செய்தார்களா? ,அல்லது அதே காலகட்டத்தில் தான் கருணா பிளவு இடம்பெற்றிருந்தது. அவர்கள் செய்தார்களா? என்பது குறித்து தெரியாது. ஆனால் இது குறித்து கட்டாயம் ஒரு விசாரணை தேவை.

கேள்வி:- கருணா அம்மான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதாக கூறி இருந்தால் நீங்கள் அதனை ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:- அதுபற்றி பரிசீலனை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏதாவதொரு கட்சியில் இணைய வேண்டும். ஆனால் இங்குள்ள கட்சிகள் அனைத்திற்கும் கொள்கைகள் உள்ளன. அதாவது வடக்கு கிழக்கு இணைந்த ஆட்சி, மற்றும் காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டும். ஆனால் முன்னர் விடுதலைப் போராட்டத்தின் போது இக்கொள்கையில் இருந்தவர். பின்னர் கொள்கையினை கைவிட்டுவிட்டார். பொலிஸ் அதிகாரம் தேவையில்லை காணி அதிகாரம் தேவை என்னும் கருத்தை அண்மைய ஊடகங்களுக்கு தெரிவித்தார். இவ்வாறு முரண்பட்ட கொள்கைகளை உள்ளவரை இணைத்தால் கூட்டமைப்பினுடைய செல்வாக்கு அடிமட்டத்தினோடு குறைந்து விடும். ஆகவே இவரை நான் மட்டுமல்ல யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

கேள்வி:- கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைவதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பதில்:- கருணா அம்மான் இணையமலே தமிழர் விடுலைக் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பல உதாரணம் உள்ளது. 2006ம் ஆண்டு யாழில் இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு 322 வாக்குகளைப் பெற்றார். மீண்டும் கூட்டமைப்புடன் இணைந்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது 2906 வாக்குகளைப் பெற்று சொந்த மாவட்டமான கிளிநொச்சியில் தோற்கடிக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட கொழும்பிலே போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதை விட அவர் தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினை ஒன்றையும் ஆரம்பித்தார். அவர் தன்னிச்சையாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட போதும் தனித்து போட்டியிட்ட  போதும் அனைத்து இடங்களிலும் இவர் சார்ந்த கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டது.

கேள்வி:- 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்தவர்கள் தானே? 

பதில்:- ஆம். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டமையினால் வெள்ளிமலை அவர்கள் வெற்றியடைந்தாரே தவிர ஆனந்த சங்கரியின் ஆதரவினாலோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி என்பதனாலோ அல்ல. அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி எதில் கேட்டிருந்தாலும் வெற்றி அடைந்திருப்பார். அதேவேளை 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட போது வெற்றியடையவில்லை.

19 Oct 2015

மாற்று முஸ்லிம் அணிகள் உருவெடுக்கும் அபாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் - ஏ.எல்.தவம்

மாற்று முஸ்லிம் அணிகள் உருவெடுக்கும் அபாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் - ஏ.எல்.தவம்


கேள்வி – பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நீங்கள் மௌனமாக இருப்பதான ஒரு தோற்றமிருக்கிறதே, அதற்கான காரணத்தை அறிய முடியுமா?

23 Sept 2015

சர்வதேச சட்டத்துறை வல்லுநரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த  கண்ணமுத்து சிதம்பரநாதனுடனான செவ்வி

சர்வதேச சட்டத்துறை வல்லுநரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த கண்ணமுத்து சிதம்பரநாதனுடனான செவ்வி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை எனும் பழம் பெறும் கிராமத்தில் பிறந்த பேராசிரியர் கலாநிதி கண்ணமுத்து சிதம்பரநாதன் தற்போது லண்டனில் வசித்து வருகின்றார்.

கலாநிதி சிதம்பரநாதன் சர்வதேச சட்டத்துறை வல்லுநர். சர்வதேச சட்டத்துறைகளில் பல்வேறு அதி உயர்ந்த பட்டங்களை பெற்றுள்ளவர். இவர் சர்வதேச சட்டத்துறையில்  ஆய்வாளர் அவரது ஆய்வுகளுக்காக இரண்டு கலாநிதி பட்டங்களை பெற்றிருக்கின்றார். லண்டனில் பீ ஆர் சி எனப்படும் பிரித்தானியா அகதிகள் கவுன்சிலிலும் பின்பு சர்வதேச குடிவரவாளர் அமைப்பான ஐ.ஓ.எம் இலும்  கடமையாற்றிவர்.

16 Dec 2014

 மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின்  மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரனிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல், நேர்காணல்

மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரனிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல், நேர்காணல்

நேர்காணல் : மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின்  மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரனிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில 45000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கை பண்ணக் கூடிய நிலம் அமைந்துள்ளது. ஆனால் இதுவலையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 9000 ஆயிரம் ஏக்கர் நிலத்தில்தான் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளன. மேலதிக 36000 ஏக்கர் நிலங்கள் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படாமல் இருக்கின்றன.

என மரமுந்திரிகைக் கூட்

15 Dec 2014

ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து அர்களுடனான நேர்காணல்,நேர்காணல்

ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து அர்களுடனான நேர்காணல்,நேர்காணல்

கிழக்கில் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் கடந்த யுத்த சூழ் நிலையினாலும் சுனாமி போன்ற கோர இயற்கை அனர்த்தங்களினாலும் பெரிதும் பாதிக்கப் படிருந்தது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன

இந்நிலையில மட்டக்களப்பு மாவடத்திற்கு புதிதாக நியமிக்கப் பட்டுள்ள ஜனாதிபதியின் இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், ஜனாதிபதியின் அலோசகருமான  அருண் தம்பிமுத்துவுடனான நேர்காணலை இங்கு தருகின்றோம்.

கேள்வி: ஜனாதிபதியினால் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திடம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றுக் கிடையிலான வித்தியாசத்தைப் பார்த்தால் ஆகக் குறைவாகக் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் வரவுக்கும், செலவுக்குமான உரிய வித்தியசம் அதிகமாகக் காணப்பட்டு வந்தன. இது  பொருளாதார ரீதியான முக்கியத்துவத்தினைக் காட்டுகின்றது.

இவற்றினை விட இளைஞர் யுவதிகளின் தேவைகள் உத்தியோகஸ்தர்களின் சம்பளம் உயர்த்தப் பட்டுள்ளது. கடந்த 5 வருடகாலமாக அரசாங்கம் கட்டுமான அபிவிருத்திக்கு பாரிய முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளது. ஆனால் இம்முறை சம்ர்ப்பிக்கப் பட்டுள்ள வரவு செலவுத் திடத்தில் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இது எதிர் வருகின்ற 5 வருடங்களில் மக்களின் வாழ்வாதார ரீதியாக பாரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்குரிய முதலாவது வரவு செலவுத் திடமாகத்தான் இதனைக் கருதுகின்றேன்.

கேள்வி: வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில் : வடக்கு, கிழக்கு எனும் போது இரண்டு மாகாணங்களிலும் வித்தியாசமான தேவைகளும், பிரச்சனைகளும்தான் இருக்கின்றன.  கிழக்கு மாகாணத்தில் 1976 இற்கு முன்னர் தமிழர்கள் பெரும்பான்மையாக அதாவது 50 வீதத்திற்கு அதிகமாக இருந்துளார்கள். ஆனால் தற்போது போராட்டம் மற்றும் புலம் பெயர்ந்ததன் காரணங்களினால் தமிழர்களுடைய விகிதாசாரம் குறைந்து போயுள்ளது. தற்போது கிழக்கில் 34 வீதத்திற்குக் குறைவாகத்தான் தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள்.  ஆனால் 1984 ஆம் ஆண்டுக்குப் பின்சென்று பார்தால் தமிழர்கள் 44 வீதமாகக் காணப்பட்டார்கள்.

இந்த நிலையில் அரசியல் தீர்வு எனும்போது வடகிழக்கு இணைந்த மாகாண சபைக்கான தீர்வைத்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் முன் வைத்தது. இந்த தீர்வு முன்வைக்கப்பட்டு ஒரு  வருட காலத்தினுள் கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பை நடாத்தி கிழக்கு மக்கள் ஏற்றுக் கொண்டால் அதனை வடக்குடன் இணைப்பது என்றும், கிழக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் கிழக்கு தனியாகவும், வடக்கு தனியாகவும் செயற்படும் என்றுதான் இலங்;;கை இந்திய ஒப்பந்தம் கைச்சாதிடப் பட்டது.

13 வது திருத்தச் சட்டமும் அதைத்தான் கூறியிருக்கின்றது. அதற்குப் பிறகு சரத் என்.சில்வாவின் தீர்ப்பின் கீழ் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வில்லை என்பதாலும் வடக்கு வேறாகவும், கிழக்கு வேறாகவும் பிரிக்கப்பட்டன. 

தற்போது கிழக்கில் 34 சதவீதமாக்க காணப்டும் தமிழர்களின் எண்ணங்கள், தேவைகள், எவ்வாறு பிரதிபலிக்கப்படும் என்ற கேழ்வியும் எழுந்துள்ளது.

முக்கியமாக மாகாண சபை முறைமையில் இருக்கின்ற காணி பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றை கவனித்தால் இந்த அதிகாரங்கள் எதற்காக எனச் சிந்திக்க வேண்டும்.  காணி அதிகாரங்களைப் பாவித்து எமது பூர்வீக நிலங்களைப் பாதுகாப்பதற்காக என்ற காரணம்தான் அடிப்படையாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரம் என்பது கணி அதிகாரத்தையும் ஏனைய அதிகாரங்களையும் அமுல் செய்வதற்கு பலமான ஒரு அம்சமாக்க காணப் படுகின்றது. கிழக்கில் சிறுபான்மையாகக் காணப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்ளை எவ்வாறு இந்த காணி அதிகாரம் பாதுகாக்கும் என்ற கேழ்வி எழுந்துள்ளது. கிழக்குத் தமிழர்கள் காணி சம்மந்தமாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றார்கள்.

ஆனால் வட கிழக்கு இணைந்த வகையில் ஒரு அரசியல் தீர்வு எனும்போது அது கடினமாக அமையும். ஏனெனில் வடக்கு மக்களின் தேவைகளும், கிழக்கு மக்களின் தேவைகளும் வித்தியாசமாகக் காணப் படுகின்றது. இதனை அனைத்து தமிழர்களும்  உணர வேண்டும்.

அதனடிப்படையில் அரசாங்கம் முன்வைக்கும் தீர்வில் கிழக்குத் தமிழர்களின் அபிலாசைகளையும், தேவைகளையும், உணர்ந்து அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

கேள்வி: அரசினால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திடங்கள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : அரசாங்கம் ஆயிரக்கணக்கான மில்லியன்களை மக்களின் அபிவிருத்திகளுக்காக செலவு செய்திருக்கின்றது. இதனால் பாரிய முன்நேற்றங்கள் அடைந்திருக்கின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், என்றெல்லாம் திட்டங்கள் முன்மொழியப்பட்டு நடைபெறுகின்றன. அபிவிருத்திகள் நடைபெற்றிருக்கின்ற அதேவேளை சில கேழ்விகளையும் எழுப்ப வேண்டும். கார்பட் வீதிகளை விடகொங்றீட் வீதிகளுக்கு செலவு அதிகம், இது பிரதேச அரசியல் தலைவர்ளும், அதிகாரிகளாலும் எடுக்கப்பட்ட முடியவாகும். அரசாங்கம் தேசியரீதியில் பணத்தை செலவு செய்தாலும். சரியான முறையில் இந்தப் பணங்கள் சென்றடைந்திருக்கின்றதா என்ற கேள்வி எழும்பொழுது இங்குள்ள அரசியல் தலைவர்களும் மற்றும் நிருவாகிகளும் பதில் கூறவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இதனை வழிட கிழக்கு மாகாணத்தில் இருந்த நல்லையா அவர்களின் காலத்திற்குப் பின் இதுவரையில் ஒரு தொழில் பேட்டையும் அமைக்கப் படவில்லை அவரது காலத்தில் அமைக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலைகூட தற்போது மூடப்பட்டுள்ள வேதனையான நிலை காணப்படுகின்றது.

கிழக்குத் தழிழர்களுக்கென்று வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படல் வேண்டும், தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும், இவற்றுக்கு இனிவரும் காலத்தில் அரசு முன்வர வேண்டும். என்ற விடையத்தை அரசிடம் நாங்கள் தெழிவாக முன்வைக்க வேண்டும்.

கேள்வி: கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் உறவு பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில் :  கிழலுள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் தனித்துவம் கொண்ட சமூகங்கள். என்னைப் பெறுத்த வரையில் தமிழ் முஸ்லிம் உறவுகள், சிங்கள் தமிழ் உறவுகளைப் போன்றுதான் இருக்க வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஆகிய இரு சமூகமும் பின்னிப்பிணைந்து தேவைகளை முன் வைக்க முடியாது.  தமிழர்களுக்கும் முஸலிம்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன, கலாசார ரீதியாகவும் பாரிய விதியாசங்கள் இருக்கின்றன ஆனால் மொழியில் உடன்பாடுகள் இருக்கின்றன. மொழிக்கு வெளியெ இரு சமூகத்திற்கும் தனித்துவம் இருக்கின்றது. இந்தியாவின்  தமிழ் நாட்டிலுள்ள முஸ்லிங்கள் அவர்களை தமிழர்களாகத்தான் சொல்லி வருகின்றார்கள். ஆனால் இலங்கயிலுள்ள முஸ்லிம்மகள் தனித்துவமான சமூகமாக தெழிவாக் இனம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த 30 வருடகாலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திலும் சரி ஏனைய போராட்டங்களிலும் சரி முஸ்லிம்கள் அதில் தங்களை இணைக்காமல் செயற்பட்டு தற்காத்துக்கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இரண்டு சமூகத்திற்கும் நல்லுணர்வு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தும் நாங்கள் தமிழர்கள்; தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விடையத்தை மறந்து விடக்கூடாது.  தமிழர்களும், சிங்களவர்களும், முஸலிம்களும் சேந்துதான் கிழக்கு மாகாணத்தில் வழவேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இதனுள் தமிழர்களின் தனிதுத்துவத்தை எப்படிப் பாதுகாப்பது. எப்படி வட மாகாணத்தில் தமிழர்கள், எனைய சமூகத்தினரின் அடையாளங்களை பறித்துக் கொள்ளக் கூடாது என நினைக்கின்றார்களோ அதேபோல் கிழக்கிலுள்ள தமிழர்களும் அவர்களது அடையாளங்களை அழிப்பதற்கு உரிய எந்தவொரு காரியத்தையும் அனுமதிக்க முடியாது.

தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணசபையை ஆண்டு கொண்டிருப்பது எமது சகோதர இனமான முஸ்லிம்கள்தான் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாகத்தான் இந்த கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றார்கள். அனர்த்த நிதி ஒதுக்கீட்டில் கூட பாரிய பிரச்சனைகள் இருக்கின்றன முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அவர்களது சமூகத்தை முன்வைத்தி பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.  தமிழ் சமூகத்தின் பிதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்கள் மத்தில் ஒரு தளர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டுள்ளது என்பதனை உணரவேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது.  தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தேசிய அரசியலில் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கேள்வி: கிழக்கில் குறிப்பாக எல்லைப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் மத்தியில் காணிப்பிரச்சனைகள் இருக்கின்து என கூறப்படுகின்றதே…………….. 

பதில் :  வட்டமடு, நாவிதன்வெளி, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று ஆரையபதி, போன்ற பல பகுதிகளில் காணிப் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இவைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் காணப்பட முடியும்.
கிழக்கிலுள் தமிழர்கள் அவர்களது காணிகளைப் பாதுகாப்பதற்குச் சவால்கள் எழுந்துள்ளன. இவற்றுக்கு எவ்வாறு தமிழ் சமூகம் முகம் கொடுக்க முடியும். என்ற நிலை இருக்கின்றபோது 13 வது திருத்தச் சட்டம், தமிழ்மக்களுக்கு எந்த விதமான சாதகத்தையும் கொடுக்காது. என்ற விடையத்தை நாங்கள் உணர வேண்டும்.


கேழ்வி: ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் வரப்போகின்றது என பலர் மத்தியிலும் பேசப்படுகின்றதே!  இதுபற்றிக் கூறுங்கள்?  

தேசிய தேர்தல்கள் நிட்சயமாக அடுத்த வருடம் வரப்போகின்றன என்பதை நாங்களும் கருதுகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் தேசிய தேர்தல்களை எதிர் கொள்வதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். முக்கியமாக ஜாதிபதித் தேர்தலை எடுத்துக் கொண்டால் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்கப்பு மாவட்டத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு வருகின்றோம். காரணம் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் தேர்தல் காலத்தில் எடுத்த முடிவுகள் தமிழர்களுக்கே சாதகாமாக அமைந்திருக்க வில்லை.

இனிவரும் காலங்களில் தமிழர்கள் தேசிய அரசியலில் முக்கியமாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்த எனது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ் மக்கள் வாக்கழிக்க வேண்டும் என்ற கருத்தை நான் முன் வைக்க விரும்புகின்றேன்.

அது மட்டுமின்றி தமிழ் மக்கள் காலாகாலமாக வெற்றிபெறும் தலைவர்கள் யார் என்பதை அறியாமலும், வாக்குகளை அளிக்காமலும். தேசியரீதியில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத தலைவர்களுக்கு வாக்கழித்து வந்ததன் மூலம்  எமது ஞாயமான தேவைகளும், கோரிக்கைகளும் பூர்தி செய்யப்படுமா என்பதை தொடர்ச்சியாகக் கேட்க வேண்டும்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கோரப்பட்டுவரும் உரிமை, தேசியம் போன்ற விடையங்கள் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில்:  நானும் தமிழ் தேசியப் பின்னணியில் இருந்து வளர்ந்தவன் என்ற ரீதியில் தமிழ் தேசியத்தை வெறுப்பவன் அல்ல. இருந்தலும் கூட தமிழ் தேசியத்தை விட தமிழர்கள் முக்கியம் என்று கருதுபவன். தமிழ் தேசியத் தலைவர்கள் 1948 இற்கு முன் ஏன் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைக்கவில்லை என்ற கேழ்;வியை நாங்கள் சற்று சிந்திக்க வேண்டும். 1948 இற்கு முன் எந்த ஒரு தமிழ் தேசியத் தலைவரும் தனிநாட்டுக் கோரிக்கையினை முன் வைக்காமல் 1949 ஆம் அண்டு சுந்தரலிங்கம் அவர்கள் தமக்குத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார், இதுவரையில் தமிழர்கள் முன் வைக்கும் கோரிக்கைளுக்கு தீர்வுகள் வரவில்லை என்றால் ஏன்? என்ன காரணம்? என்பததையும் சற்று ஆராயப்பட வேண்டும்.

ஆனாலும் தற்போது வரைக்கும் அவர்கள் அதே பாணியில் அதே பல்லவியைப் பாடிக்கொண்டு வருகின்றார்கள் என்று கேட்டால் அவர்கள் தமது காலத்தை அறியாமல், ஜதார்த்தத்தை உணராமல், தொடர்ந்து உணர்ச்சி அரசியல் மூலமாக  தமது அரசியல் நடவடிக்கைகளை முன்நெடுக்கலாம் என கருதுகின்;றார்கள். 

1987 ஆம் அண்டுக்கு முன்னர் இந்தியாவின் மூலம் தீர்வுகள் வரும் என தமிழ் தேசியத் தலைவர்கள் முன்வைத்தார்கள். பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு விட்டு மீண்டும் ஒரு முறை இந்தியாவின் மூலம் திர்வு வரும் எனக் கூறுகிறார்கள் பின்னர் சர்வதேச மயமாக்கிவிட்டோம் என்று கூறுகின்றார்கள்.

1983 இல் இருந்து தமிழர்களின் பிரச்சனைகள் சர்வதேச மயமாக்கப் பட்டிருந்ததுதான் இருந்த போதிலும் தமிழர்;களின் பிரச்சனைகள் என்ற விடையத்தில் சர்வதேச ரீதியில் மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றினை உணராமல் தமிழர்களின் பிரச்சனைகள் சர்வதேச மயப்படுத்தப் படுள்ளது. என்று சொல்லப்பட்டு வருவதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை நாங்கள் மறுக்கவே முடியாது. தற்போதுள்ள தமிழ் தலைவர்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்களை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.  அபிவிருத்தி முக்கியமில்லை உரிமைதான் முக்கியம் என்று கூறுகின்றார்கள்.

உரிமை வேண்டாம் என நான் கூறவில்லை உரிமையினைப் பெறுவதற்கு ஆயத்தமான நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்களா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தற்போது தமிழர்கள் அரசியலைப் பலப்படுத்தி அடுத்த சந்ததியினரின் கையில் கொடுக்க வேண்டும். அது மட்டுமன்றி எமது தமிழர்களின் உரிமைக் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழர்களின் பொருரளாதாரம் மீண்டும் கட்டி எழுப்பப் படல் வேண்டும் தற்போது அபிவிருத்தியில் நாங்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றோம். நாங்கள் ஏனைய சமூகத்தினை நம்பி அர்களிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள் போல் மாற்றப் பட்டிருக்கின்றோம். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமாகவுள்ள தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்திக் குழுத்தலைவர் யார் என்றால் சகோதர இனத்தைச் சார்ந்தவராகத்தான் இருக்கின்றார். இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் பல ஏனைய சமூகத்தினைப் பிரதிபலிக்கின்ற பகுதியில்தான் அதிகம் இடம்பெறுகின்றன. என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. இவை அனைத்திற்கும் காரணம் என்ன வென்றால் வெறுமனே எதிர் கட்சியில் இருந்து கொண்டு ஏங்கிக் கொண்டு இருப்பதனால் தமிழர்களின் எதிர் காலத்தைப் பலப்படுத்த முடியாது. எமது அடுத்த சந்ததியினரை சிறுபான்மை இனமாக மட்டுமல்ல செயலிழந்த சமூகமாக தள்ளுவது என்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


கேள்வி: மாகாணசபை அதிகார முறையில காணி, பொலிஸ் அதிகாரத்திற்கு எதிரானவர் நீங்கள் ஏன என விளக்கமாகக் கூறுங்கள்.

பதில்:  மாகாண சபை முறைமையில் இருக்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றை கவனித்தால் இந்த அதிகாரங்கள் எதற்காகச் சிந்திக்க வேண்டும்.  காணி அதிகாரங்களைப் பாவித்து எமது பூர்வீக நிலங்களைப் பாதுகாத்தல் என்ற காரணம்தான் அடிப்படையாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பொலிஸ் அதிகாரம் என்பது கணி அதிகாரத்தையும் ஏனைய அதிகாரங்களையும் அமுல் செய்வதற்கு பலமான ஒரு அம்சமாக்க காணப் படுகின்றது. கிழக்கில் சிறுபான்மையாகக் காணப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை எவ்வாறு இந்த காணி அதிகாரம் பாதுகாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இல்லாமல் தமிழர்களின் பாணியினை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேழ்வி எழுந்தள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழர் கூட அமைச்சரவையில் இல்லை இந்நிலையில் காணி அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் கிழக்குத் தமிழர்கள் எந்த விததிலும் பயனடைய மாட்டார்கள் என்பது மட்டுமின்றி தற்போது காணிக்கான போட்டியும் தமிழர்கள் மத்தியிலும், முஸ்லிங்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் கிழக்குத் தமிழர்கள் மத்தியில் மாற்றுச் சமூகத்தினர் தமது காணிகளை அபகரிக்கப் போகின்றார்களா? என்ற அச்சமும் இருக்கின்றது. எனவே காணி, பொலிஸ் அதிகாரத்தில் கிழக்குத் தமிழர்கள் தமது ப+ர்வீக நிலத்தைப் பாதுக்காக்க முடியாது. என்பதை உணர்ந்துதான் நான் கிழக்கு மாகாணத்தில் காணி பொலிஸ் அதிகாரத்திற்கு எதிரானவனாக இருக்கின்றேன்.

கேள்வி: எதிர் காலத்தில் காலத்தில் வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும், தமிழ் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில்:  கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமக்கென ஒரு தனித்துவமான தலைவர்களை உருவாக்க வேண்டும். கிழக்குத் தமிழர்கள் தேசிய அரசியலில் முக்கிய பலமுள்ளவர்களாகக் காணப்படல் வேண்டும். வடக்கினைப் பிரதிநிதித்துவப் படுத்த ஒரு கபினட் அமைச்சர் இருக்கின்றார், மலையக மக்களுக்காக ஒரு கபினட் அமைச்சர் இருக்கின்றார். ஆனால் கிழக்குத் தமிழர்களின் தேவைகளை முன் வைப்பதற்கு எவரும் அற்ற நிலைதான் காணப்படுகின்றது. இவ்வாறு ஏன் நாங்கள் இருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கென்று ஒரு அமைச்சர் உருவாக வேண்டும். அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் உணர வேண்டும். எனவே கிழக்குத் தமிழங்கள் இனிவரும் காலங்களில் மாற்று சமூகத்தின் அதிகாரத்தின கீழ் இருந்து தத்தளிக்காமல் தமக்கென்று தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற விடையத்தை முன்வைக்க விரும்புகின்றேன். 

தமிழ் தேசியம் எதிர் கட்சிகளுக்கு ஆதரிக்கக் கூடாது என்று நான் கூறவில்லை ஆனால் ஆட்சியிலிருக்கும் தேசிய அரசியலுக்கும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும். எமது பிரதிநிதிகளை அங்கும் அனுப்ப வேண்டும்.  இதனை ஏனைய சமூகத்திடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம்.  தமிழர்களைப் பொறுத்த வரையில எமக்கென்று பலமுள்ள அரசியல் தலைவர்கள் இல்லை


கேள்வி: வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலை மையமாக வைத்துத்தான் பல அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன என எதிர்க் கட்சிகள் கூறுகின்றதே….?

பதில்:  எதிர்க் கட்சிகள் என்ன கூறுகின்றார்கள் என்பதை விட ஜனாதிபதித் தேர்தலை மையமாக வைத்துத்தான் பல அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப் பட்டள்ளன என்று கூறினால் கடந்த காலங்களில் நடந்த அபிவிருத்திப் பணிகள் பற்றி என்ன சொல்லப் போகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்துத்தான் நடைபெறுகின்றது என்றால் அபிவிருத்திகளின் தேவை இன்னும் உள்ளது அவைதான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றினை மறந்துவிட முடியாது.

தற்போது முடிவுறாமல் இருக்கும் அபிவிருத்தித் திடங்களை செய்து முடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்பட்டு வருகின்றது. என்னைப் பெறுத்த வரையில் தற்போதுதான் என்னூடாக பல அபிவிருதிகளைச் செய்வதற்குரிய வழிமுறைகள் ஏற்பட்டிருக்கன்றன. இதுவரை காலமும் எமக்கு எந்த விதமான வழிமுறைகளும் இல்லாமல் நாங்கள் ஜனாதிபதியிடம் சென்று இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேர்தல் தொகுதி கடந்த காலங்களில் அபிவிருத்தியில் புறக்கணிக்கபட்டு வந்துள்ளது. என ஜனாதிபதின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன் அவர்கள் பட்டிருப்புத் தொகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதியிடம் கூறியிருந்தார் பட்டிருப்புத் தொகுதியில் எந்தவொரு அபிவிருத்திகளும் மேற்கொள்ளாமல் அங்குள்ள மக்கள் வாடுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்தார். எனவே கடந்த காலங்களில் புறக்கணிக்கபட்டு வந்த பல பகுதிகள் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்குடன் அபிவிருத்திகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக நடைபெற்று வருகின்றன.

கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதியின் இணைப்பாளரான நீங்கள் நிமிக்கப் பட்டு பெறுப்பேற்று வந்துள்ளீர்கள், அதனைவிட மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கு  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும், நியமிக்கப் பட்டுள்ளீர்கள் இந்த மாவட்ட மக்களுக்கு உங்களுடைய பணி எவ்வாறு அமையப் போகின்றன? 

பதில்:  உண்மையைச் சொல்லப் போனால் ஜனாதிபதியின் இணைப்பாளராக, அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்து கொண்டு தற்போதைக்கு என்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மிகவும் குறைவாகத்தாக் காணப்படுகின்றது.  நான் ஜனாதிபதியினால் நியமிக்கப் பட்டுள்ளதனால் உரிமையுடன் எதனையும் தட்டிக்கேட்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டாலே ஒழிய எனது பதவியை வைத்து சில வேலைத் திடங்களை முன்னெடுக்க முடியுமே தவிர மக்களுக்காக பாரிய திட்டங்களை முன்னெடுக்க முடியாது.

ஆனால் எங்களைப் போன்றவர்கள் இங்கு இல்ல விட்டால் கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதை ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டும் என நான் கருதுகின்றேன். நாங்கள் இனிவரும் காலத்தில் அபிவிருத்திகளை மட்டுமல்லாது, எமது உரிமைகளையும், கவனமாகச் சிந்தித்து எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். 

இந்த விடையத்தில் எதிர் கட்சியிலிருந்து குரல் கொடுப்பவர்களைப்போல் நானும் அரசிற்குள் இருந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காகவும்,  அபிவிருத்திகளுக்காகவும், எமது வரங்கால கால சந்தத்தியினரின் எதிர் காலத்திற்காகவும், நான் குரல் கொடுப்பேன் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.  ஆனால் இனிவரும் காலங்களில் அபிவிருத்திகள் சரியாக முன்னெடுக்கப்படல் வேண்டும். தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கபட்டல் வேண்டும்.  மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும் இவை எல்லாவற்றிககும் மேலாக தமிழர்களின் பூர்வீக பாரம்பரிய உரிமைகள், பாதுகாக்கப் படல் வேண்டும், அதற்கு ஒரு பலத்தினை இந்த கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்துவோம் என்பனைக் கூறிக் கொள்கின்றேன்.

கேள்வி:தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றதே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வட கிழக்கில் காணிகளைக் கொடுத்து உதவுவோம் என்று கூறுகின்றதே இது எந்தளவு சாத்தியம்? 

பதில்: காணிகளைக் கொடுக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறினால் வடக்கில் இருந்த மலையக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பது பற்றி என்னால விரிவாகக் கூறமுடியும். ஏனெனில் வன்னி மாவட்டத்திற்கு அந்த மக்களைத்தான் ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளி சூறையாடினார்கள். இவ்வாறான வேண்டுகோளுக்கு போகக் கூடாது.

எனது கருத்து என்னவெனில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றார்கள் இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழ வேண்டும்.  இது எமது நாடு எமது பாரம்பரிய பூமி என்ற கருத்தில் நாங்கள் வாழ வேண்டும்.

தற்போது கிழக்குத் தமிழர்களின் எதிர் காலைத்தை ஒரு கேழ்விக்குறியாக்கி வைத்துவிட்டு நாங்கள் மலையக மக்களைப் பாதுகாப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுவது. மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. ஏனெனில் வடக்கில் தமிழராட்சி கிழக்கில் வேறு ஒருவரின் ஆட்சிக்கு  நாங்கள் தயார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காக்கிரசுடன், பேச்சுவார்த்தை நடாத்திய தமிழ் தேசியத் தலைவர்கள்  கிழக்குத் தமிழர்களைப் பற்றிப் பேசுவதங்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் தமிழர்களின் ப+ர்வீக ப+மி தமிழர் ஒருவர் ஆட்சியிலிருக்க வேண்டிய பூமி எமது எதிர காலைத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டு தற்போது நாங்கள் மலையக் தமிழர்ளைப பாதுகாப்போம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கிழக்கில் நாங்கள் தத்தழித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிசுடன் என்ன அடிப்படையில் ஒற்றை ஆட்சியினை அமைப்பதற்குத் தயாரானார்கள். கிழக்குத் தமிழர்களை பார்வையாளர்களாக மாற்றிவிட்டு தற்போது மலையம் பற்றிப்பேசுகின்றார்கள். இது வெறும் வேடிக்கையான விடையமாகும்.

கேள்வி: காலப்போக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேருமாக இருந்தால் நிலமை எவ்வாறாக அமையும். 

பதில்:  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தால் கிழக்குத் தமிழர்கள் இன்னும் பாதிக்கப் படுவார்கள். ஏனெனில் கிழக்குத் தமிழர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது. கிழக்குத் தமிழர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பகடைக் காயாகப் பாவித்து அரசியல் தீர்வுக்கு வரமுடியாது.

எந்த அடிப்படையில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பமுடியும். என்ற கேழ்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன். 1987 ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம் உறவுகளைக் குலைத்து முஸ்லிங்களைத் தனித்துவமாகக் கொண்டு சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு தமிழர்களின் எதிர் காலத்தைப் பாதுகாக்கப் போகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன அருகதையில் பேச்சுவார்த்தையும், கூட்டாட்சியும் பற்றிப் பேசுகின்றார்கள். நாங்கள் அதனை ஒருபோதும் நம்ப முடியாது. தமிழர்களின் தனித்துவம் பாதுகாக்கப்படல் வேணடும் என்ற விடையத்தில் நாங்கள் மறந்துவிடக் கூடாது.

ஆட்சி நடக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிங்கள் என மூன்று சமூகமும் இணைந்துதான் ஆட்சி புரிய வேண்டுமே தவிர முஸ்லிங்களும், தமிழர்களும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒன்றிணைவதை கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனெனில் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் பொருளாதார ரீதியிலும், அரசில் பலத்திலும் ஒரு தத்தழிக்கும் நிலையில் இருக்கும்போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேருவோம் என்றால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்காக இதுவரையில் எனைத் தெரிவித்திருக்கின்றது. எனவே இந்த இரு கட்சிகளின் கூட்டிணைவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் தேசியம் இவ்வாறான  பாதையில் செல்லுமானால் கிழக்குத் தமிழர்கள் தமிழ் தேசியத்தைத் தூக்கிய எறியும் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தள்ளப்படும். என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என அவர் தெரிவித்தார். 

(நேர்கண்டவர் : (எஸ்.ராதி)