கின்னஸ் சாதனை படைக்க 1.2 சென்றி மீட்டர் உயரத்தில் பிள்ளையார் சிலையினை செதுக்கிய இளைஞனுக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வரினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணி பிரதேசத்தை சேர்ந்த சுந்தரம் ஜனா சுகிர்தன் என்ற இளைஞன் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற நோக்கில் பல நுற்பமான சிறிய சிற்பங்களை செதுக்கி வருகின்ற நிலையில் இவர் 1.2 சென்றி மீட்டர் உயரத்தில் முதிரை மரத்தில் பிள்ளையார் சிலை ஒன்றினை செதுக்கியுள்ளார்
1.2 சென்றி மீட்டர் உயரத்தில் மரத்தினால் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலையின் மூலம் கின்னஸ் சாதனை படிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டக்களப்பு மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர ஆணையாளர் .கே .சித்திரவேல் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த சிலையினை பார்வையிட்டதுடன் குறித்த இளைஞனுக்கு இவர்களால் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது
.இதேவேளை இவ் இளைஞனின் கின்னஸ் சாதனைக்கான முயற்சிகளை எடுப்பதாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். (நன்றி தீபம்)
0 Comments:
Post a Comment