7 Sept 2025

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடம் களுதாவளை தேசிய பாடசாலை 77 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

SHARE

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடம் களுதாவளை தேசிய பாடசாலை 77 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை(03.09.2025) அன்று ஆரம்பமான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை(07.09.202) முடிவடைந்துள்ளது.  போட்டிகளின் முடிவில் பட்டிருப்பு கல்வி வலயம் 148 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.  

இப்போட்டிகளில் இரண்டாவது இடத்திதை 128 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலயமும், மூன்றாம் இடத்தை 119 புள்ளிகளைப் பெற்று மகோயா கல்வி வலயம் பெற்றுக்கொண்டுள்ளன. 

பட்டிருப்பு கல்வி வலயம் சார்பில் களுதாவளை தேசிய பாடசாலை   77 புள்ளிகள், செட்டிபாளையம் மகாவித்தியாலயத் 37 புள்ளிகள், மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலம் 11 புள்ளிகள், மண்டூர்-14 சக்தி மகா வித்தியாலம் 11 புள்ளிகள், பழுகாமம் கண்டுமனி மகா வித்தியாலம் 05 புள்ளிகள், தேற்றாத்தீவு மகா வித்தியாலம் 04 புள்ளிகள், தும்பங்கேனி மகா வித்தியாலம் 01 புள்ளி, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் 01 புள்ளி, குருமன்வெளி சக்தி மகா வித்தியாலம் 01 புள்ளியையும் பெற்றுப் கொடுத்துள்ளன.

இம்முறை களுதாவளை தேசிய பாடசாலை சார்பில் இரண்டு மாகாண புதிய சாதனைகளும் மற்றும் ஒரு சாதனையும்  மாணவர்களால் சமப்படுத்தப்பட்டிருந்தது. 

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுனர் வீரராக களுதாவளை தேசிய பாடசாலையை சேர்ந்த 194 சென்றி மீற்றர் பாய்ந்து புதிய சாதனை படைத்த கு.பகிர்ஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

பெண்கள் பிரிவில் 65 புள்ளிகளுடன் களுதாவளை தேசிய பாடசாலை மாகாணத்தில் முதலிடம் பெற்றுக்கொண்டது. 

ஒட்டுமொத்தமாக 77 புள்ளிகளுடன் தொடர்ந்து மாகாணத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை இம்முறை முதலிடம் பெற்றுக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
























SHARE

Author: verified_user

0 Comments: