தெஹிவளை தேசிய மிருகக் காட்சிசாலையைப் பார்வையிடும் எதிர்வரும் செப்ரெம்பெர் மாதம் 9ஆம் திகதியிலிருந்து தற்போதுள்ள கால அளவை விட 5 மணிநேரம் நீடிக்கப்படவுள்ளதாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் Minister of Sustainable Development and Wildlifeகாமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்த மிருகக்காட்சிச்சாலையைப் பார்வையிடும் நேரம் காலை 8.30 தொடக்கம் மாலை 6.00 மணிவரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நேர அட்டவணையை செப்ரெம்பெர் 09ஆம் திகதியிலிருந்து வாரத்தின் எல்லா நாட்களும் காலை 7.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை நீடிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையைப் பார்வையிட வருவோரின் வேண்டுகோளுக்கிணங்கவும் நாட்டின் தூரப் புறங்களிலிருந்து வருவோரின் சௌகரியத்துக்காகவும் இந்த நேர நீடிப்புச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலுள்ள பழைமையான மிருகக்காட்சிச்சாலைகளில் தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையும் உள்ளடங்குகிறது.
11 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 3000 ஆயிரம் உலகின் அரியவகை விலங்கினங்களைக் கொண்டுள்ள இந்த மிருகக் காட்சிச்சாலையைப் பார்வையிட வருடாந்தம் சுமார் 15 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள் என்று மிருகக் காட்சிச்சாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.
0 Comments:
Post a Comment