களுதாவளையில் நடைபெற்ற பௌர்ணமி கலை விழா.
கலாசார உத்தியோகஸ்த்தர் திருமதி வசந்தகுமாரி பத்பராசவின் ஒழுங்கமைப்பில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இப்பௌர்ணமி கலை விழாவில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அ.மனேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், மேலும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணீதரன், களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன், கலாசார உத்தியோகஸ்த்தர்கள், ஆலயங்களின் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது களுதாவளை இரத்தினா நர்த்தனாலயம், பரதாஞ்சலி நாட்டியாலயம், ஸ்ரீ நர்த்தனால கலாமன்றம், தேற்றாத்தீவு திண்ணை ஆற்றுகை கலாமன்றம், போன்ற கலை மன்றங்களால் பயிற்றுவிக்கப்பட்ட கலை நிகழ்வுகள் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டன.
பௌர்ணமி தினத்தில் கிரணகமும் சேர்ந்திருந்ததானால் முழு மதியில் கலைகள் ஆற்றுகை செய்யப்பட்டமையானது மனதிற்கும், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்ததாக இதன்போது கலந்து கொடோர் கருத்துத் தெரிவித்தனர்.


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)

.png)
.png)
.png)
.png)
.png)

.jpg)

.jpg)























.jpg)
.jpg)

.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment