மட்டக்களப்பு செட்டிபாளையத்தினைச் சேர்ந்த இந்து என்பவர் எழுதிய இத்தனைநாளாய் எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு செட்டிபாளைய மகாவித்தியாலயத்தில் தேன்பாளையம் கலைக்கழக செயலாளர்
த.விஸ்வஜிந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி செ.யோகராசா பிரதம அதிதியாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரன் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புமற்றும் புனர்வாழ்வு இந்துகலாசார அமைச்சின் மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் சி.அமலநாதன் , மண்முனைதென் எருவில் பற்று பிரதேசசெயலாளர் மூ.கோபாலரெத்தினம் , கிழக்குமாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் ஆகியோர் கௌரவஅதிதிகளாகவும்.
சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலைசிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவக்கொழுந்து பொன்னையா, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் வே.நவிதரன், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை உப அதிபர் வி.பரமேஸ்வரன் மற்றும் கணக்காளர்களான இ.சிவகுமார், வி.கணேசமூர்த்தி, தேசியமனிதவள அபிவிருத்தி சபை மற்றும் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் ஆகியோரும்.
விசேடஅதிதிகளாக மட்டக்களப்பு தேசியகல்விக் கல்லூரியின் விரிவுரையாளர்களான வே.பகீரதன் ஆ.சிறிதரன் உட்பட ஆன்மீக அதிதிகள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நூலின் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் கோ.குகன் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment