கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக்
காப்புச் சட்டம் தொடர்பிலான பயிற்சி பட்டறை.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர்களுக்தான “நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்” ஏ,ஐ தொழில்நுட்பம், போலிச் செய்திகளைக் கண்டறிதல், மற்றும் ஏ.ஐ தொழில் நுட்பத்தின் நன்மை தீமைகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை சனிக்கிழமை(26.07.2025) மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இதன் போது கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த விடையங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்களும் உரிய சட்டம் தொடர்பில் வளவாளர்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்ட ஆலோசகர் அஸ்வினி நடேசன் மற்றும் ஆர்.ஜசிகரன் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினர்.
0 Comments:
Post a Comment