கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின்
கீழ் களுதாவளை கடற்கரைப் பிரதேசம் சுத்தப்படுத்தும் நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை கடற்கரைப் பகுதி செவ்வாய்கிழமை(29.07.2025) சிரமதானம் மூலம் சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுறுற்றுலாத்தலம் எனும் தொணிப் பொருளில் ; குருக்கள்மடம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில், இராணுவத்தினர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள், மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலயம் தேசியபாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இணைந்து கொண்டு இதனை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பிளாஸ்ற்றிக் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், பொலித்தீன், போன்ற கழிவுப் பொருட்கள் என தரம் பிரிக்கப்பட்டு கழிவுகள் சேகரிக்கப்பட்டதுடன்,
கடற்கரைப் பிரதேசமும் துப்பரவு செய்யப்பட்டன.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment