சுப்பிரமணிய
குருக்கள் வீதியின் முதலாம் குறுக்கு கொங்றீட் வீதியாக புனரமைப்பு.
130 மீட்டர் மீற்றர் நீளம் கொண்ட அக்குறித்த வீதி மிக நீண்டகாலமாகவிருந்து புனரமைப்புச் செய்யப்படாமல் கிறவல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 04 மில்லியன் செலவில் அவ்வீதி கொங்கிறீட் விதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வீதி புனரமைப்பு ஆரம்ப பணிகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன், களுவாஞ்சிக்குடி கிராம தலைவர் அ.கந்தவேள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், எனப் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
நீண்ட நாட்களாக கிறவல் வீதியாக காணப்பட்ட வீதியினூடாக மழைகாலத்தில் பயணம் செய்ய முடியாத நிலையில் ஏற்படுவதாகத் தெரிவித்து கிராம மக்களால் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இவ்வீதியைப் புனரமைப்புச் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment