6 Jan 2021

புதிய அலை கலை வட்டம் கவிதைப் போட்டியும் பரிசளிப்பும்

SHARE

 புதிய அலை கலை வட்டம் கவிதைப் போட்டியும் பரிசளிப்பும்

கடந்த 40 ஆண்டுகளாக இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம்சென்ற 1995ஆம் ஆண்டு முதல் எவோட்ஸ் கலைகலாசார போட்டிகளை நடத்திவருகின்றது.

அவ்வகையில் 2021ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகளை மாதாந்தம் நடத்தவுள்ளதுபோட்டிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களுக்கூடாக நடத்தப்படவுள்ளன.

அதன் முதற் கட்டமாகத் திறந்த கவிதைப் போட்டி ஜனவரி மாதத்துக்கான போட்டியாக நடத்தப்படவுள்ளது.

போட்டிகளுக்கான நிபந்தனைகள்

1)   உங்களுக்கு விருப்பமானதலைப்பில் கவிதைகளைஅனுப்பலாம்.

2)   கவிதைகள் மரபுக் கவிதையாகவோபுதுக் கவிதைகளாக இருக்கலாம்.

3)   கவிதைகள் 12 வரிகளுக்கு குறையாமலும் 24 வரிகளுக்கு மேம்படாமலும் இருத்தல்வேண்டும்.

4)   அனுப்பப்படும் கவிதைகளில் சொந்தப் பெயர்புனைப்பெயர்முகவரிதொலைபேசி இலக்கங்கள் போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்

5)   கவிதைகள் யாவும் எதிர்வரும் 18.01.2021க்குள் எமக்கு கிடைக்கக் கூடியதாக பதிவிட வேண்டும்.

puthiya alai என்ற வட்சப் குறுப் மூலமாகவும் மற்றும் puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற ஈமெயில் முகவரியூடாகவும் அனுப்பி வைக்க முடியும்.

6)   வயதெல்லை 15 வயது முதல் 35 வயது வரை.

7)   நடுவர்களின் முடிவே இறுதியானது.

இந்த போட்டிகளுக்கான பரிசளிப்புகள் அந்தந்த மாத இறுதியில் நடைபெறும்முதல் கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு 30.01.2021இல் நடைபெறும்.

பரிசுகளுக்காக மூன்று ஆக்கங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படும் அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு முதல் பரிசு     :- 5000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்இரண்;டாம் பரிசு :- 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும் மூன்றாம் பரிசு  :- 2000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும் மேலதிக விபரங்களுக்கு 077 7412604, 077 6274099, 076 2002701 என்ற அலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.




SHARE

Author: verified_user

0 Comments: