கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு மாட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதை பயிற்சிப் பட்டறை ஒன்று வெள்ளிக்கிழமை(02.06.2023) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.
இளம் எழுத்தாளர்களின் திறமையை மேலும் மேம்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிலரங்கின் வளவாளர்களாக புகழ்பூத்த எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்களும், அவரோடிணைந்து பிரதி அதிபர் சஜிந்திரன் அவர்களும் கலந்து ஆக்கபூர்வமான வகையில் கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
பயிற்சிப் பட்டறையின் நிறைவில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், கலாசார உத்தியோகத்தர் திருமதி வசந்தகுமாரி பற்பராசா மற்றும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment