5 Oct 2015

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்

SHARE
இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்ற தொனிப்பொருளில் இளைஞசர்களை சமூகத்தின் முன்மாதிரிகளாக மாற்றவேண்டும். திசைமாறும் இளைஞர்களை மாற்றியமைக்க வேண்டும் சமூகத்தின் நற்பிரஜைகளை உருவாக்க இன்றைய இளைஞர்களே முன்மாதிரியாகத் திகழவேண்டும். என்பதற்க்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் இளைஞர்களை ஒவ்வொரு பிரிவுகளாகச் சென்று சந்தித்தார்.
இதன் போது அவர்களின் குறைகள் தேவைகளைக் கேட்டறிந்த அவர் இதற்க்கு அடுத்தத்டுத்த வாரங்களில் மூன்று மாவட்டங்களுக்கும் சென்று சகல பிரதேச பிரிவுகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களையும் சந்திக்கவுள்ளாதாகவும் தெரிவித்தார்.

இளைஞர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று கிழக்கு மாகாணத்தை உலககுக்கோர் எடுத்துக்காட்டாக மாற்றியிருக்கிறோம். இதற்காக தேசிய அரசாங்கம் ஒன்றை மத்திய அரசாங்கம் அமைக்கவும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்த நாமே மத்திய அரசுக்குக் கற்றுக்கொடுத்தோம்.

எனவே கிழக்கை சிறப்பானதொரு மாகாணமாகக் கட்டியெழுப்ப இம்மாகாணத்தில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் உங்களை நீங்கள் தயார்படுத்தி உதவுவீர்கள் என்றால் இந்த கிழக்கு மாகாணம் போதையற்றஇ புகைத்தலற்ற உலக்குக்கே எடுத்துக்காட்டான சிறந்ததொரு மாகாணமாக மாற்றியமைப்பேன். அதற்காக என்னுடன் மாகாண சபை அமைச்சர்கள்இ உறுப்பினர்கள் ஆகியோர் பூரண ஒத்துழைப்புடன் காத்திருக்கிறார்கள். என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இளைஞர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: