2 Apr 2025

ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் இந்த பட்லந்த வதை முகாம் உருவாக்கப்பட்டிருந்தது.-பிரபு எம்.பி.

SHARE

ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் இந்த பட்லந்த வதை முகாம் உருவாக்கப்பட்டிருந்தது.-பிரபு எம்.பி.

பட்லந்த வதைமுகம் கடந்த காலங்களில் இலங்கை அரசியல் வரலாற்றிலும்சரி, இலங்கை வரலாற்றிலும்சரி, ஒரு கறை படிந்த ஒரு நாட்களாகத் அதனை கருத முடியும். அந்த காலப்பகுதியில் இந்த நாட்டை நிர்வகித்திருந்த ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் இந்த பட்லந்த வதை முகாம் உருவாக்கப்பட்டிருந்தது.

என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்றுப் பிரதேச உள்ளுராட்சிசபை தேர்தல் பரைப்புரைக் கூட்டம் செவ்வாய்கிழமை தினம்(01.04.2025) தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இன்போது பிரதேச வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாகு குறிப்பிட்டர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்... 

வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்திதான் ஆட்சி அமைக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த தேர்தலை நடத்த முடியாது எனக் கூறி இந்த இத்தேர்தலை தள்ளிப் போட்டிருந்தார். எமது அரசாங்கம் முதலாவது கன்னி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் அந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு இருந்தோம்.

அந்த அடிப்படையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளை திசைகாட்டி பெற்றுக் கொள்ளும்.

ஜனாதிபதியின் மீதும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மீதும், மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இந்த நாட்டிலே புரையோடிப் போயிருக்கின்ற அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றி இருக்கின்றோம். குற்றவாளிகள் தற்போது தண்டனைகளைப் பெற்று அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் என்று ரீதியில் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம் .அரசியல் பழிவாங்கல்களைக் கடந்து சுயாதீனமாக சரியான சட்டவாக்கத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன. 

மக்கள் மீது அதிகரித்த நம்பிக்கை தேசிய மக்கள் சக்தி மீண்டும் மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனூடாக இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில்கூட தேசிய மக்கள் சக்தி  பெரும்வாரியான சபைகளை கைப்பற்றி வெற்றிகளை நாங்கள் கொண்டாட காத்திருக்கின்றோம். 

பட்லந்த வதைமுகம் கடந்த காலங்களில் இலங்கை அரசியல் வரலாற்றிலும்சரி, இலங்கை வரலாற்றிலும்சரி, ஒரு கறை படிந்த ஒரு நாட்களாகத் அதனை கருத முடியும். அந்த காலப்பகுதியில் இந்த நாட்டை நிர்வகித்திருந்த ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் இந்த பட்லந்த வதை முகாம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனூடாக பல இளைஞர்கள் அவர்களின் வாழ்வியல் இல்லாமல், செயற்பட்டிருந்தது. அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது, அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன, ஆனாலும் சரியான முறையில் அது அடுத்த கட்டத்திற்கு சட்டரீதியான முறையில் மேற்கொள்ளாமல் கடந்த கால அரசாங்கம் தள்ளிப் போட்டிருந்தது. 

இன்று தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் அதை பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக முன்மொழிந்து இருக்கிறது. எதிர்வரும் காங்களில் அதன் விவாதம் நடைபெற இருக்கின்றது. இதுதான் இலங்கையின் வரலாற்றில் உருவாக்கப்பட்ட முதலாவது வதைமுகாம் அதன் பின்னர்தான் பல வதை முகாம்களை இலங்கை பூராகவும் உருவாக்கப்பட்டு அதனூடாக பல இளைஞர் யுவாதிகள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார்கள். பலர் காணாமலாக்கப்பட்டிருந்தார்கள், அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன, உயிர்களும் பறிக்கப்பட்டன, அனைத்தும் இழந்த நிலையில்தான் காணப்பட்டிருந்தன. ஆகவே அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கரிசனை கொள்கின்றோம். அதனூடாக இந்த நாட்டுக்கு நீதியான நேர்மையான அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.










இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதியை நாங்கள் வெளிக்கொணர்வோம்.

 

கிழக்கில் எந்த வகையான கூட்டமைப்புக்கள் உருவாகினாலும் இன்று அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் எப்படிப்பட்ட கூட்டமைப்புகளை உருவாக்கினாலும்கூட அவர்களால் இந்த ஒரு தேர்தலை எதிர்கொண்டாலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. மக்கள் அவர்களை ஏற்கனவே நிராகரித்திருந்த நிலையில் இன்னும் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டார்கள். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்கள் மிகத் தெளிவாக எமது மாவட்ட மக்கள் சிறந்த அறிவோடு அவர்களை அணுகுவார்கள் இந்த தேர்தலிலும்கூட அவர்கள் அதன் பிரதிபலங்களை பார்க்கக்கூடியதாக இருக்கும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: