2 Apr 2025

வேட்பாளரின் விட்டின் மீது பெறோல் நெருப்பு தாக்குதல்.

SHARE

வேட்பாளரின் விட்டின் மீது பெறோல் நெருப்பு தாக்குதல்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் உளு;ராட்சிமன்ற வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை(31.03.2025) இரவு பெற்றோல் மற்றும் நெருப்பினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த எவருக்கும் எந்தஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வேட்பாளரான பிறேமாகரன் சம்பவத்தின்போது அருகிலுள்ள மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயேதான் இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் பிரேமாகரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முனனெடுத்து வருகின்றனர்.


 











SHARE

Author: verified_user

0 Comments: