களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய
அத்திசட்சகர் புவநேந்திரநாதன் திருகோணமலை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திசட்சகராக பணியாற்றி வந்த வைத்திய அதிகாரி.க.புவநேந்திரநாதன் தற்போது பதவி உயர்வு பெற்று திருகோணமலை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நிகமிக்கப்பட்டுள்ளார்.
அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையைப் பொறுப்பேற்ற காலம் முதல் இடமாற்றம் பெற்றுச் செல்லும் வரையில் அப்பகுதி நோயாளர்களின் நலன் கருதி அவரது தலைமைத்துவத்தின் கீழ் வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்நெடுத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொவிட் காலத்தில் இவ்வைத்தியசாலை உட்பட்ட அப்பகுதியிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும், ஏற்பட்டிருந்த ஒட்சிசன் தட்டுப்பாட்டின்போது அலஸ்கா பௌண்டேஷன், மற்றும் எமது சமூகம் ஆகிய அமைப்புக்களின் மூலம் வைத்தியசாலையல் நிலவிய ஒட்சிசன் தட்டுப்பாடு நிவர்தி செய்யப்பட்டிருந்தது. அத்தோடு வைத்தியசாலையில் இல்லமலிருந்து ஐ.சி.யு பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வைத்தியசாலையின் சேவைகளை தொய்வு நிலைக்குச் செல்ல விடாமல் தக்கவைத்துக் கொண்டு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டன.
அப்பகுதி சிறுநீராக நோயாளர்களின் நலன்கருதி, சிறு நீரக இரத்த சுத்திகரிப்பு ஆரம்பிக்கப்பட்டதோடு, மேலதிக இயந்திரங்களை இயந்திரங்களை அவுஸ்ரோலின் பெடரேஷன் நிறுவனத்திடமிருந்து பெற்று தற்போதுவரை அச்சிகிச்சை வழங்கப்பட்டு வருப்படுகின்றன.
மனநோயாளர் ஆண், பெண், விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரப்படுகின்றன. அங்கு பிள்ளைப்பெற்றுக்குப் பின்னரான பராமரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வரப்படுகின்றன.
சிசுபராமரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதுடன், கருவள சிகிச்சை நிலையம், குழந்தைப்பேறுக்கான புதிய சிகிச்சை நிலையம், எண்டஸ்கோப்பி பிரிவு என்பனவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவரது சேவைக்காலத்தில் மகப்பேற்று வைத்திய நிபுணர், விசேட மனநோய் சிகிச்சை வைத்திய நிபுணர், விசேட கதிர் வீச்சு வைத்திய நிபுணர், உள்ளிட்ட புதிய வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்பட்டு அப்பகுதி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரப்படுகின்றன.
வெளிநோயாளர் மருத்துவ ஆய்வுகூடம், நோயாளர்
பாதுகாப்பு நிலையம், தாய் சேய் பராமரிப்பு நிலையம், வைத்தியசாலை கழிவு மீழ் சுத்திகரிப்பு
நிலையம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கு மேலாக பழுகாமம், துறைநீலாவணை, செட்டிபாளையம், மண்டூர், ஆகிய பிரதே வைத்தியசாலைகளிலும், களுதாவளை, திக்கோடை, மகிழூர், பாலையடிவட்டை, ஆகிய ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவு நிலையங்களிலுமிருந்து அப்பகுதி நோயாளர்களின் இரத்த மாதிரிகளைப் பெற்று அவற்றுக்குரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, எல்லைக் கிராமமாகவுள்ள திக்கோடையில் நாளாந்தம் நடமாடும் வைத்திய முகாமும் நடைபெற்று வருகின்றது.
இக்காலப்பகுதிக்குள் இவ்வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை பொலிஸ் அலகு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும், வெளிநோயாளர் பிரிவிலும், நோயாளர் முகாமைத்துவம், பேணப்படுவதோடு, திட்டமிடல் பரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் சேவைக் காலத்தில் கழிவு முகாமைத்துவத்தில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள், சுற்றாடல் ஜனாதிபதி தேசிய விருது ஆகியவற்றையும் இவ்வைத்தியசாலை பெற்றுள்ளதோடு, மக்களுக்கும். நோளாயர்களுக்கும், இடையே இவ்வைத்தியசாலையில் 7 வருடங்களாக பணியாற்றி பதவியுயர்வு பெற்றுச் செல்லும் வைத்திய அத்தியட்கர் க.புவநேந்திரநாதன் 24 மணித்தியாலங்களும் நேரடி தொடர்பிலிருந்து செயற்பட்டு வந்தவர்.
இரண்டு மாடிகளைக் கொண்ட 21 அறைகளுடன் கூடிய வைத்தியர்கள் தங்கியிருப்பதற்குரிய புதிய நவீன வசதிகளைக் கொண்ட விடுத்தி அமைத்துக் கொடுக்கப்பட்டன.
இவ்வைத்தியசாலையில் நிதி பற்றாகுறை நிலவுகின்ற போதிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பரோபகாரர்கள், தனவந்தர்களின் உதவிகளைப் பெற்று பல இலெட்சக்கணக்கான வைத்திய இயந்திரங்கள், சாதனங்கள், உபகரணங்களையும், பெற்று இவ்வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் மருத்துவ சேவைகளை இலகு படுததப்பட்டுள்ளன.
எனினும் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில்
இன்னும் வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகஸ்ர்தர்களின் பற்றாக்குறை நிலவுகின்ற
போதிலும், தனது 7 வருட சேவைக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரம்
செறிந்து வாழும் இந்த பட்டிருப்புத் தொகுதி மக்களுக்கு இலஞம், ஊழல், இன்றி, மிகுந்த
சேவையாற்றி சென்றிருக்கின்றார். அவர் மீண்டும் ஒருமுறை இவ்வைத்தியசாலையைப் பொறுப்பேற்று
இப்பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்;டும் என அவரை நாம் வழியனுப்பி வைக்கின்றோம் என
அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


0 Comments:
Post a Comment