28 Mar 2025

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான கலை, ஆக்கத்திறன் போட்டி 2024/2025

SHARE

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான கலை, ஆக்கத்திறன் போட்டி 2024/2025

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான கலை, ஆக்கத் திறன் போட்டி  மட்டக்களப்பு மாவட்ட  உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(28.03.2025) இடம் பெற்றது. 

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் ஆண், பெண் உத்தியோகத்தர்களின் கலை, ஆக்கத் திறனை மேம்படுத்துவதற்கு மாவட்ட செயலகத்தினால் இவ்நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் நடுவர்களாக கலாசார மத்திய நிலைய போதனாசிரியர் அன்டனி சத்தியசீலன் பாய்வா, கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக போதனாசிரியர் இ. பிருந்தா பங்குபற்றினர்.













SHARE

Author: verified_user

0 Comments: