ஆரையம்பதி பகுதியில் கட்டாக்காலி மாடுகளின்
தொல்லை அதிகரிப்பு பிரதேச சபை நடவடிக்கை எடுக்கவில்லையா என மக்கள் கேள்வி.மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரதேசத்திற்குட்பட்ட ட ஆரையம்பதியின் பல பகுதிகளிலும், பிரதான வீதிகளிலும், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால், வியாபாரிகள், வாகன சாரதிகள், பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் என பலரும் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மாடுகளை வளர்ப்போர் மேய்ச்சலுக்கு விடும்போது, மக்கள் பயன்படுத்தும் பாதைகளிலும் குறிப்பாக பிரதான வீதிகளில் விடுவதனால் வீதி விபத்துக்கள் அப்பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றன.
வாகனங்கள் பயணிக்கும் திடீரென முன்னால் இக்கால்நடைகள் திடீரென குறுக்கீடு செய்வதனாலும், பாய்வதனாலும், விபத்துக்குள்ளாகி பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கால்நடைகள் வீதிகளில் கழிக்கும் எச்சங்களினாலுதம் பலவிதமான சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதோடு, அந்த எச்சங்களிலும் வழுக்கி விழுந்து விபத்துக்கள் சம்பவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் கட்டாக்காலியாக மாடுகளை விடுபவர்களுக்கு எதிராக ஆரையம்பதி பிரதேச சபை நிருவாகம் ஏன் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே அப்பகுதியில் இவ்வாறு கட்டாக்காலியாக மாடுகளை விடுபவர்களுக்க எதிராக நிரந்தர திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அதனை கடைப்பிடிக்கும் வகையில் நடைமுறையை வகுக்க வேண்டும். இல்லையேல் தொடற்சியாக இவ்வாறு அப்பகுதியில் வீதிகளில் கட்டாக்கலியாக மாடுகளை விடுவதும், விபத்துக்கள் அதிகரிப்பதும் தொடர்பதையாகவே அமையும் எனவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.


0 Comments:
Post a Comment