அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கமும்,
போரதீவுப் பற்றுப் பிரதேச முன்பள்ளி ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா.
போரதீவுப் பற்றுப் பிரதேச முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவி திருமதி.ஜெ.ஜெயதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், போரதீவுப் பற்றுப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் சி.கமல்ராஜ், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சு.சிவரெத்தினம், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திருமதி.சீ.அருந்ததி முன்பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாரம்பரிய முறைப்படி வயலில்
அறுவடை செய்து கொண்டு வந்திருந்த புது நெல்லை உரலிலே இட்டு உலக்கையால் குற்றி பொங்கல்
நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாவிலை மற்றும் குருத்தோலைளால் தோரணங்கள் கட்டி, கோலம்
இட்டு, 56 பொங்கல் பானைகள் பானைகள் பொங்கப்பட்டன.












0 Comments:
Post a Comment