விவேகாந்தபுரம் கிராமத்திற்கு அகின் பவுண்டேன்
நிறுவனத்தால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.
இத்திட்டம் முடிவுறுத்தப்படும் நிகழ்வு செவ்வாய்கிழமை(03.03.2026) அக்கிராமத்தில் நடைபெற்றது. இதன்போது அகில் பவுண்டேசன் நிறுவனத்தின் இஸ்தாபகர் கோபாலகிருஷ்னண், அந்நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிராமசேவை உத்தியோகஸ்த்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்திகோகஸ்த்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அக்கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் அசிரி வழங்கப்பட்டதோடு, முதியவர்களுக்குரிய ஆடைகள், வாழ்வாதாரத்திற்குரிய நிதி உதவிகள், பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்குரிய நிதி உதவிகள், பாடசாலை மாணவர்களுக்குரிய அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், என பல உதவித்திட்டங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
லண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் அகிலன் பவுண்டேஷன் நிறுவனத்தினால் கடந்த நான்கு வருடங்களாக அக்கிராமத்தில் கல்வி, வாழ்வாதாரம், அக்கிராமத்திலுள்ள நூலகத்திற்கான நூல்கள், அறநெறிப் பாடசாலைக்குரிய உதவிகள், குடிநீர் கிணறு அமைத்துக் கொடுத்தல், என ஏராளமான உதவித்திட்டங்களை நல்கி வந்துள்ளது.
தமது அமைப்பு நான்கு வருடங்ளாக இக்கிராமத்தில்
பல சேவைகளைச் செய்து வந்துள்ளது. இன்றுடன் எமது இச்செய்பாடு இக்கிராமத்தில் முடிவுறுத்தப்பட்டு
இன்னுமொரு கிராமத்திற்குச் செல்கின்றோம். எனினும் இங்குள்ள மக்கள் ஏதாவது தேவை ஏற்படின்
எம்மைத் தொடர்பு கொள்ளலாம் என இதன்போது அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர்
வி.ஆர்.மகேந்திரன் தெரிவித்தார்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment