2 Feb 2024

கட்சியின் பொதுக்கூட்டம் தொடார்பில் ஊடகங்களுக்கு மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லை – சாணக்கியன் எம்.பி

SHARE

கட்சியின் பொதுக்கூட்டம் தொடார்பில் ஊடகங்களுக்கு மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லைசாணக்கியன் எம்.பி.

கூட்டத்தை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. இது ஒரு சட்ட ரீதியான விடையமாகும் அந்த அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அவர் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன். இந்த விடையம் தொடர்பில் ஊடகங்களுககு கருத்துக்கள் வழங்குவது தொடர்பில் பல உட்கட்சி முரண்பாடுகள் வரும் காரணமாக இதுதொடர்பில் மேலதிக விபரங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை(01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்கள் கட்சியின் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருந்தார். உண்மையிலேயே கட்சியின் கூட்டங்களை நடாத்துவது, அதனை ஒத்திவைப்பது தொடர்பான அதிகாரங்கள் பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு. அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு பதில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய டொக்டர் சத்தியலிங்கம் வருகை தராத காரணத்தினால் கட்சியின் யாப்பின் பிரகாரம் இரண்டாவது துணைச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் அவர்கள்.

எனவே கூட்டத்தை நடாத்;துவது. அதனை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. இது ஒரு சட்ட ரீதியான விடையமாகும் அந்த அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அவர் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன். இந்த விடையம் தொடர்பில் ஊடகங்களுககு கருத்துக்கள் வழங்குவது தொடர்பில் பல உட்கட்சி முரண்பாடுகள் வரும் காரணமாக இதுதொடர்பில் நான் மேலதிக விபரங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை. என தெரிவித்த அவர்,

மூன்று வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி அரசாங்கம் வழங்காமலுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வடகிழக்கிலுள்ள மாவட்டங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்க வேண்டும். 30 வருடங்களில் இழந்தவற்றிற்கு அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என தொடற்சியாக வரும் அரசாங்கங்களிடம் நாங்கள் கேட்டுக் கொண்டு வருகின்றோம். எனினும் யுத்தம் முடிவுற்று 15 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் இன்றுவரையில் எமது கோரிக்கைகள் அனைத்தும் தெற்கிலே இருக்கின்ற மாவட்டங்களோடு சமநிலைப்படுத்துவதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அவற்றை மேற்கொள்வதற்குத் தவறியிருக்கின்றன.

இது தேர்தல் வர இருக்கின்ற காலம் இந்நிலையில் 25 கோடி நிதிதான் இந்த மாவட்டத்திற்கு தற்போது அபிவிருத்திக்காக வந்துள்ளது. அதுவும் மாவட்ட செலயகத்தினூடாகத்தான் இந்த ஒதுக்கீடுகள் வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே எந்த ஒதுக்கீடும் இல்லாத நிலை இருக்கின்றது. இந்நிலையில் மக்களுடைய சிறிய சிறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது. இதேவேளை நிருவாக ரீதியான சீர்கேடுகளை நாம் சீர் செய்வதற்குரிய முயற்சிகளை எடுத்தாலும்கூட மக்களுடைய பொதுவான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிதி தொடர்பான விடையத்தில் போதுமான அளவு நிதியில்லை.

மாறாக தெற்கிலே பல விடையங்க் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கோரிக்கைக்கு மலையத்திற்கு விசேட நிதி ஒதுக்கியுள்ளோம் என ஜனாதிபதி கூறுகின்றார். இவ்வாறான நிலையில் வடகிழக்கில் திருப்தியடையக்கூடிய அளவிற்கு அபிவிருத்திக்காக எந்த அரசாங்கமும் நிதி வழங்கவில்லை. எனவே அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் நிருவாக ரீதியான விடைங்க்ள பேசப்படுகின்றன. அபிவிருத்தி சார்ந்த விடைங்கள் பேசப்படுவது குறைவாக்கத்தான் உள்ளன. என அவர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: