வத்தளை: ஜீசஸ் வித் அஸ் (Jesus With Us Prayer Ministry) ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய திகதிகளில் மாலை 5:30 மணிக்கு இலக்கம் 52 கெனல் வீதி கெந்தலை வத்தளையில் அமைந்துள்ள தலைமையகத்தில் மாபெரும் அற்புத பெருவிழா மற்றும் எழுப்புதல் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் Dr.சாம் பிரகாஷ் (MBBS) சிறப்பு உரையாளராகக் கலந்து கொண்டு தேவ செய்திகளையும் பிரார்த்தனைகளையும் நடத்தவுள்ளார்.
அவருடன் போதகர் நிமாஷ் பெர்னாண்டோ மற்றும் போதகர் ஆமோஸ் ஆகியோரின் வழிநடத்துதலில் ஆராதனைப் பாடல்கள் இடம்பெறும்.
கொழும்பு போதகர்கள் ஐக்கியம் மற்றும் இலங்கையின் தேசிய கிறிஸ்தவ ஒன்றியம் ஆகியவற்றின் ஆதரவோடு அமைப்பாளர் அருட்பணி. சாமுவேல் மிஷன் பெர்னாண்டோ அவர்களால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நோய் நொடிகள், கடன் சுமைகள், வியாபார நஷ்டங்கள், மற்றும் பல்வேறு மனக்கவலைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலையை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரார்த்தணைகள் மூலம் வாழ்க்கையில் அற்புதங்களையும் பூரண சுகத்தையும் பெற்ற பலரது நேரடிச் சாட்சியங்களும் இதன்போது பகிர்ந்தளிக்கப்படவுள்ளளன.
துன்பங்களில் இருக்கும் அலனவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இறைவனின் ஆசீர்வாதத்தையும் விடுதலையையும் பெற்றுக்ககாள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விவரங்களுக்கு:
இடம்: 52 கெனல் வீதி கெந்தலை வத்தளை (பல்லியாவத்தை பாலத்திற்கு எதிரில்)
தொடர்புகளுக்கு டோதகர் அஜித் – 077 134 3380


0 Comments:
Post a Comment