மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 300 மில்லின் நிதி ஒதுக்கீடு - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை(01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எதிர்வரும் யூன், யூலை மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டதிலே அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் அனைத்தும் அமுலாக்கப்படல் வேண்டும். அந்த வகையில் மாவட்டதிற்கு வந்திருக்கின்ற ஒதுக்கீடுகளில் பிரதேச மட்டத்தில் சரியாகப் பயன்படுத்துவதற்குரிய திட்டமிடல்கள் அதற்குரிய ஆலோசனைகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிருத்திக் குழுக்கூட்டத்தில் பெற்றுக் கொண்டோம். அபோல் இப்பகுதியிலுள்ள பிரச்சனைகளில் தீர்வு காணக்கூடியவற்றிற்கு நடவடிக்கைகளையும், நிதி மூலமாக தீர்வு காணவேண்டி விடையங்களையும் நாம் இக்கூட்டத்தின்போது இனம் கண்டுள்ளோம்.
தற்போது மாவட்ட அபிவிருத்திகளுக்காக நிதிகள் விடுபிப்புச் செய்யப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுமார் 300 மில்லியனை அண்மித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதேச அபிவிருத்திக்கு குழுத் தலைவர்களுடனும், மக்களுடனும் கலந்துரையாடி அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இததொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்களுக்கடைய அபிவிருத்திகளுக்கு நிதியை பங்கிடு செய்துள்ளோம்.
நாட்டில் பல கட்சிகள் இணைந்து கூட்டணிகள் அமைக்கப்படுவதுவும், எதிர்காலத்திலே தாங்கள் தாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்குரிய சில கூட்டணிகளை நான் அவதானிகத்துக் கொண்டிருக்கின்றேன். கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி எமக்கு வாக்கு வங்கியிலே தளம்பல், அதற்காக கூட்டணிகள் அமைக்க வேண்டிய தேவைப்பாடுகள் இல்லை அதனால் உறுதியாக நாம் எமது வேலைத்திட்டங்களை முன்நெடுத்து வருகின்றோம்.
எமக்கு இதுவரைக்கும் எந்தக் கூட்டணியுடன் இணையுமாறு எந்த அழைப்புக்ளும் விடுக்கப்படவில்லை. இவ்வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சம்மந்தமாக பிரச்சனைகள் வரும்பொத இதுதொடர்பில் நாம் அறிவிப்போம். இப்போது அதற்கான தேவைப்பாடு எழவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment