நீதிமன்ற உத்தரவினடிப்படையில் உணவகத்திற்கு
பூட்டு.
கடந்த திங்கட் கிழமை(13.07.2026) இரவு வேளையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து மேற்கொண்ட விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் போது களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
அதனஎ;படையில் இன்று புதன்கிழமை(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டடிருந்தது.
இதன்போது குறித்த உணவக உரிமையாளர் ஒரு
இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த உணவகத்தில் காணப்படும்
சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் கட்டளை
பிறப்பிக்கப்பட்டதற்கிணைங்க பொதுசுகாதார பரிசோதகர்களால் இன்போது குறித்த உணவகம் சீல்
வைத்து பூட்டப்பட்டது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment