16 Jul 2026

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர் விபத்தில் மரணம்.

SHARE

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர் விபத்தில் மரணம்.

இன்று வியாழக்கிழமை(16.07.2026) கடமையின் நிமிர்த்தம் பாண்டிருப்பிலுள்ள தனது வீட்டிலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மருதமுனையில் ஏற்பட்ட விபத்துச் சம்பவத்தில் சிக்குண்டு அவ்விடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடiமாற்றிவருபவரும், மட்டக்களப்பு நாவற்குடா இசைநடனக்கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும் தற்போது திருமணத்தின் பின்னர பாண்டிருப்பில் வசித்து வருபவருமான ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்  சொந்தமான பேரூந்தும், குறித்த உத்தியோகஸ்த்தர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஜெயராமன் ஜெகதீஸ்வரன் பேரூந்து சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

விபத்துச் சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: