26 Nov 2014

பெண்கள் வாழ்வின் பல நொண்டிச் சாட்டுகளின் மூலமாக நலிவடைந்து போகின்றனர்

SHARE

தற்போது உள்ள பெண்கள் தொழில் முயற்சிகள் எதுவும் இல்லாது பல நொண்டிச் சாட்டுகளினால் நலிவடைந்து போகின்றனர் அதனால்தான் ஆண்களில் தங்கி வாழ்கின்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றது என தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மட்;டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சலீம்மௌலான தெரிவித்தார்.


மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கம் ஏற்பாடு செய்திருந்த யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்துடன் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைக் கருத்தரங்கு நேற்று செவ்வாக் கிழமை (25) மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்..


இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்


தற்போது உள்ள பெண்கள் சமூதாயம் ஆண்களில் தங்கி வாழ்கின்ற சூழ்நிலைகள் பல காணப்படுகின்றது தங்கி வாழ்கின்ற மனப்பாங்கு இருப்பின் வாழ்க்கையை முன்னேற்ற முடியாது.


அதில் சரியான காரணம் பெண்கள் எதுவித தொழில் முயற்சிகளும் இன்றி வாழ்கின்றனர் ஆனால் அதற்கு சில நிறுவனங்களினால் சந்தர்ப்பங்கள் வழங்கினாலும் நொண்டிச் சாட்டுகளினால் நலிவடைந்து போகின்றனர் பெண்கள் பல தங்களை மாக்கிக்கொண்டால் ஆணாதிக்கம் ஒருபோதும் இருக்காது அதன் முதற்படி எமது வாழ்க்கைப்பாதையை திட்டமிட்டு எம்மை நாம்புரிந்து கொள்ள வேண்டும்  அதிலும் இலட்சியமான வாழ்க்கைத் திட்டம் வெற்றிப்பாதைக்கே கொண்டு சென்றுவிடும்.


வெற்றிப்பாதையில் அமையக்கூடியவை இலட்சியமான கனவுடன் கூடிய நகர்வு தகவல்களை பெறுதலும் சேகரித்தலும் பலங்கள் மற்றும் நேரமுகாமைத்துவம் இருப்பின் எந்த ஒரு திட்டதையும் சரியான முறையில் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும்.

ஆகையினால் தொழில் பயிற்சிகள் வழிகாட்டல்கள் மூலமாக சிறந்த ஆலோசகளை பெற்றுக் கொண்டு நிலையான வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும்
எனஅவர் தெரிவித்தார்.


தொழில் பயிற்சி தொழில் வழிகாட்டல் உத்தியோகஸ்தர் செ.பி.அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் உத்தியோகத்தர் டி.உதயராஜா தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரிகள்இ கிறிஸ்தவ வாலிப சங்கத்தினர் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது தொழில் முக்கியத்துவம் சரியான தொழிலை தெரிவு செய்தல் வியாபார விரிவாக்கம் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: