2 Feb 2024

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இளைஞர் பொங்கல் விழா

SHARE

(.எச்.ஹுஸைன்)

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இளைஞர் பொங்கல் விழா.

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் வளர்க்கும் நோக்கில் இளைஞர் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டதாக அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்டத்திற்குரிய இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் சைல்ட் பண்ட் (ஊhடைன குரனெ) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் அமுலாக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் பண்பாட்டு பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை 26.01.2024 வவுணதீவு தாண்டியடி சண்முகா இளைஞர் கழக விளையாட்டு மைதானத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

வவுணதீவுப் பிரதேச செயலாளர் என். சத்தியானந்தியின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜே. கலாராணி, அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் வி. சுதர்ஷன், ஏயு லங்கா நிறுவனத்தின் நிறைவேற்;றுக் குழுச் செயலாளர் எஸ். சத்தியநாதன்,  உட்பட அந்நிறுவனத்தைச் சேர்ந்த இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

“பிரதேசத்தின் ஒட்டு மொத்த சமூக, பொருளாதார, கலை கலாசார அபிவிருத்தியில் இளைஞர்கள் பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என்று தெரிவித்த அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்டத்திற்குரிய இணைப்பாளர் அனுலா, இளைஞர்களிடையே தலைமைத்துவப் பாங்கை விருத்தி செய்வதற்கும் சமூக அபிவிருத்தியோடு இணைந்தததாக  பாரம்பரிய கலையம்சங்களையும் மங்கி மறையாமல் காப்பதற்கும் இளையோரின் பங்களிப்பு இன்றியமையாததாகும்’’ என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் பாரம்பரிய கிராமிய கலை அம்ச பொழுது போக்கு விளையாட்டு நிகழ்வுகளான முட்டி உடைத்தல், கோலம் போடுதல், மாவை ஊதிக் காசு எடுத்தல், சங்கீதக் கதிரை ஓட்டம், நீர் நிரப்புதல், தேசிக்காய் கரண்டி நடை, பலூன் மாற்றுதல், கம்பு சுற்றுதல், நாட்டிய நடனம் உட்பட பல்வேறு கலையசம்சங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளுடன் பொங்கலும் இடம்பெற்றது. 























SHARE

Author: verified_user

0 Comments: