மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்
சபை அமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஒன்பதாவது சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (05.02.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இச்சபை அமர்வில் உப தவிசாளர் வசீகரன், உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிதிப் பற்றாக்குறை காரமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கருவள சிகிச்சைக்கு மாதாந்தம் மூன்று இலெட்சம் வழங்குதல், எதிர்வரும் 15 ஆம் திகதி துறை நீலாவணையில் சர்வதேச தரத்திலான பாலர் பாடசாலை ஒன்றைத் திறத்தல், இதுவைரை வீதி மின் விளக்குகள் பொருத்தப்படாத இடங்களில் மின் விளக்குகளைப் பொருத்துதல், மழை காலங்களில் தேங்கிக்கிடக்கும் வெள்ள நீரை வெளியேற்ற அவ்வப்போது உடன் நடவடிக்கை எடுத்தல் போன்ற பல தீரமானங்கள் வாத பிரதிவாதங்களுடன் எடுக்கப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment