பிரித்தானியாவில் – இலங்கை தூதரகத்துக்கு
முன்பாக ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக்கான ஆர்ப்பாட்டம்.
இந்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் இதில் பங்கேற்று, ஈழத்தமிழர்களின் அரசியல் தன்னாட்சி, மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், நீண்ட காலமாக தொடரும் ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள்எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டம், ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கிய உறுதியான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், அனைத்துலக ஈழத் தமிழ் மக்களின் ஒற்றுமையான குரலாகவும் அமைந்தது.
தன்னாட்சிக்கான உரிமைப் போராட்டக் களத்தில் எழுச்சியுடன் களமிறங்குவது எங்களின் கடமையும், அதே நேரத்தில் எங்களின் அடிப்படை உரிமையுமாகும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் உலக சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், சர்வதேச அளவில் நீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment