கட்சியின் விளம்பரத்திற்காகவும் தனிப்பட்டவரின்
விளம்பரத்திற்காகவும் தவிசாளர் செயற்படுகின்றார் - உறுப்பினர் குற்றச்சாட்டு.
ஒரு கட்சியின் விளம்பரத்திற்காகவும், தனிப்பட்டவரின் விளம்பரத்திற்காகவும், ஒரு பிரேரணையை கொண்டு வருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் கிருஷ்னபிள்ளை வதனகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஒன்பதாவது சபை அமர்வு வியாழக்கிழமை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஒன்பதாவது சபை அமர்வு வியாழக்கிழமை(05.02.2026) நடைபெற்றது. அதன்போது எமது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் ஏழாவது எமது நிகழ்ச்சியாக பிரதேசத்திலுள்ள 12 வட்டாரங்களிலும், சிறுவர்களுக்கான ஆங்கில மொழிமூல பாடசாலைகளை ஆரம்பித்து இலவசமாக ஆங்கிலக் கல்வியை கற்பித்தல் என்ற விடயம் உட்பகுத்தப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக எமது பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றதா இந்த நிதி எவ்வாறு வழங்கப் போகின்றீர்கள் என்ற கேள்வியை நாம் தவிசாளிடம் முன்வைத்த போது அதற்கு அவர் பதில் வழங்கவில்லை. துறைநீலாவணையில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆங்கில முன்பள்ளி கட்டுவதற்கு நடாத்துவதற்கு கட்டடம் தயார்படுத்தப்பட்டுள்ளது என்றால், இப்பிரதேசத்திலுள்ள 12 வட்டாரங்களுக்குமாக 12 கோடி செலவழிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அதேபோல் ஒரு பாடசாலைக்கு இரண்டு ஆசிரியர்கள்
நியமிக்க வேண்டியுள்ளது. ஒரு ஆசிரியருக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில்
இரண்டு ஆசிரியர்களுக்கும் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை இந்த பிரதேச சபையினால்
வழங்க வேண்டியுள்ளது.
12 பாடசாலைகள் இவ்வாறு இப்பிரதேசத்தில் அமைவதாக இருந்தால் மாதாந்தம் ஆறு இலெட்சம் ரூபாயும், ஒரு வருடத்திற்கு 72 இலெட்சம் ரூபாவையும் இந்த சபையில் இருந்து வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. அந்த நிதி சபைக்கு எவ்வாறு பெறப்படுகிறது, இதனை எவ்வாறு வழங்கப்படவுள்ளன. என நாம் தவிசாளிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் பதில் வழங்கவில்லை.
இச்செயற்பாடானது ஒரு கட்சியின் விளம்பரத்திற்காகவும், தனிப்பட்டவரின் விளம்பரத்திற்காகவும், ஒரு பிரேரணையை கொண்டு வருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது முற்று முழுதான ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவும், இவ்வாறான தீர்மானங்களை நாங்கள் நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம் என அவர் தெரிந்துதான் இந்த தீர்மானத்தை அவர் கொண்டு வந்து எங்கள் மீது சேறு பூசுவதற்கு தவிசாளர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என்பதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்.
ஏனெனில் இந்த விடையதானம் எட்டாவது எமது கூட்டத்தொடரிலும் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்தத் திட்டத்திற்குரிய நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை இந்த நிதியினை எவ்வாறு பெறப்போகின்றீர்கள் என நாம் தவிசாளிடம் கூறுமாறு கேட்டிருந்தபோது அந்த கேள்விக்கான பதிலை அவர் இதுவரையும் வழங்கவில்லை. ஆனால் இப்பிரதேசத்திலுள்ள 12 வட்டாரத்திற்கும் தலா ஒவ்வொரு ஆங்கில முன்பள்ளி பாடசாலையை ஆரம்பிக்க உள்ளதாக தவிசாளர் தெரிவிக்கின்றார். இவ்வாறு வருடாந்தம் 72 இலெட்சம் ரூபாய் செலவு செய்வதற்கு இந்த பிரதேச சபை இந்த நிதிச் சுமையினை தாங்க முடியுமா என்ற கேள்வியின் காரணமாக தற்போது நாங்கள் இதற்காக எதிர்ப்பினை தெரிவித்து இருக்கின்றோம்.
மண்மனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை நோக்கினால் ஒரு கோடியே 50 இலெட்சம் ரூபாவுக்கான அபிவிருத்தித் திட்டத்துக்கான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய திட்டங்களுக்கான நிதி பெரும்பாலும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவ்வாறு ஒரு தேர்ச்சியற்ற ஒருவரினால் இந்த வரவு செலவுத் திட்டம் திட்டமிடல் இல்லாமல் எமது கருத்துக்களை உள்வாங்காமல் இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதன் அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த பிரதேச சபையின் அபிவிருத்தி திட்ட வேலைகளை செய்ய முடியாமல் இருப்பதை அறிந்தவர்களாக நாங்கள் இருக்கின்றோம். இந்த நிலையில்தான் பிரதேச சபையில் கொண்டு வருகின்ற சில தீர்மானங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
ஏனெனில் வரவு செலவு சட்டம் என்பது ஒரு சபையினுடைய ஒரு முக்கிய ஆவணமாக இருக்கின்றது. அந்த நிதி சரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நாம் எனது முழு ஆதரவிடையும் சபையை வழிநடத்துவதற்கு நாங்கள் வழங்கி இருப்போம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
.png)
.png)
0 Comments:
Post a Comment