சித்தாண்டியில் களத்தில் இறங்கிய பொது சுகாதார பிரிவினர் டெங்கு சிவப்பு எச்சரிக்கை.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் டெங்கு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ள்ளது.
அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்த பகுதிகளிலுள்ள கிராமங்கள் வெள்ளதில் மூழ்கியிருந்தன. இந்நிலையில் சித்தாண்டி -2, சித்தாண்டி -3, சித்தாண்டி -4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு நுளம்பின் தாக்கத்தின் அதிகாரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக சித்தாண்டி 2ஆம், 3ஆம், 4ஆம் பிரிவு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் நோயாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இதுவரை 64 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று சிலர் வெளியேறிய நிலையில் இன்னும் பலர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு செவ்வாய்கிழமை (03.02.2026) பொது சுகாதர பரிசோதகர்களால் விசேட கள ஆய்வு நடவடிக்கைகள் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பிரிவுக்கு உட்பட்ட 14 பொது சுகாதார பிரிவுகளிலும் உள்ள பொது சுகாதார கள உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டு சித்தாண்டி பகுதி அனைத்து பிரிவுகளிலும் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு தொடர்பான இடங்களை கண்டறிந்ததுடன் அதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் டெங்கு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து வீட்டின் உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகளையும் பதிவு செய்தனர்.
குறித்த விசேட நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொது சுகாதார பணிமை அதிகாரிகள், செங்கலடி பொது சுகாதார பணிமை பொது சுகாதார வைத்தியர் மற்றும் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் என பலரும் கலந்துகொண்டு இந்நடவடிக்கையை மேற்கொண்டதில் 794 வீடுகள் டெங்கு தொடர்பில் ஆராயப்பட்டு 113 வீடுகளில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டதுடன், டெங்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு சட்டநடவடிக்கை பதிவு செய்யப்பட்டது. இதுவரை சுமார் 50 இற்கு மேற்பட்டோருக்கு வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.
குறித்த டெங்கு தாக்கம் அதிகமாக உள்ள அப்பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் டெங்கை கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் புகை என்பன விசுறும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment