இளம் பிரஜைகளை இணைய வழி ஊடாக தேர்தல் இடாப்பில் பெயர்களை இணைக்கும் விழிப்புணர்வு.
நாட்டின் புதிய வருடத்தில் இம்முறை தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் திணைக்களத்தினால் இம்முறை வாக்காளர் தினத்தை முன்னிட்டு விளக்கமளிக்கும் மாகாணத்திற்கான பிரதான நிகழ்வு வியாழக்கிழமை(01.02.2024) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.
இளம் பிரஜைகளை நிகழ்நிலை இணைய வழி ஊடாக தேர்தல் இடாப்பில் அவர்களின் பெயர்களை இணைக்கும் முகமாக இந்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் ஒரு கட்டமாக இளம் பிரஜைகளை எதிர்கால தேர்தலுக்கு தயாராக்கும் வகையில் நானும் வாக்களிக்க தயாராகி விட்டேன் எனும் கருப்பொருளுக்கு அமைய இதன்போது கலந்து கொண்ட அதிதிகளால் கைப் பட்டி அணிவிக்கப்பட்டு தேர்தலின் முக்கியத்துவம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் நிகழ்வில் கலந்து கொண்ட இளம் பிரஜைகளின் விவரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் தேர்தலின் முக்கியத்துவம் சம்பந்தமான உரைகளும் இடம்பெற்றன.
இதன்போது16 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை தேருநர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் தலைமையில் தனியார் கற்கை நிலையத்தில் இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு வாக்களித்தலின் பலத்தையும் அதன் தாற்பரியம், ஈ-சேவையூடாக தேடுநர் இடாப்பிற்குள் பெயரை உட்சேர்த்தல், தொடர்பாகவும், இதன் போது அதிதிகளினால் விபரிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment