மட்டக்களப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை 04.02.2026 சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கோட்டமுனை பாலத்தில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியதையடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலையடுத்து அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம்இ பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்நாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போன உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி எனும் தொனிப் பொருளில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும்இ வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம். எமது மண் எமக்கு வேண்டும்இ போன்ற அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்திப் பூங்காவை நோக்கி ஆர்ப்பாட ஊர்வலமாக சென்றனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிஸர் மற்றும் கலகம் அடக்கும் பொபொலிஸார் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட வந்த நிலையில் கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை பொலிஸார் காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது அங்கு 78 வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றது.
எனவே அங்கு இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனவே அங்கு செல்ல முடியாது நீங்கள் பிரதான பஸ்தரிப்பு நிலையம் சென்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டகார்கள் இல்லை எங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது. இந்த வீதியால் சென்று காந்திப் பூங்கா முன்னாள் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் சென்று அங்கிருந்து பிரதான பஸ் நிலையம் பகுதிக்கு செல்ல வழிவிடுமாறு பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து; பகல்12.00 மணிவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment