மக்களின் குறைபாடுகளை கிழக்கு ஆளுநர் ஊடாக தீர்த்து வைப்பதற்குரிய விசேட கலந்துரையாடல்.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திலுள்ள ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் மக்களின் குறைபாடுகளை ஆளுநர் ஊடாக தீர்த்து வைப்பதற்குரிய விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை(23.06.2023) நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஜக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சியின் இணைப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு இடையிலான. எதிர்கால அரசியல் நகர்வுகளும், அபிவிருத்தி திட்டங்களும் என்னும் கருப்பொருள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்தே ரங்கே பண்டார அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பங்கேற்புடன் இவ்விசேட உயர்மட்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது கட்சியின் அமைப்பாளர்கள் தங்களது பகுதிகளில் காணப்படும் மக்களின் குறைபாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து உங்களது கோரிக்கைகளை கட்சியின் ஊடாக தமது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் போது அதனை விரைவாக தீர்த்து தருவதாகவும் ஆளுனர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை மக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் தமது அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதன்போது கருத்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment