24 Jun 2023

தற்போது இலங்கையில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன -ஸ்ரீநேசன்.

SHARE

தற்போது இலங்கையில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன  -ஸ்ரீநேசன்.

தற்போது இலங்கையில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. குருந்தூர் மலையில்  அல்லது அதனை 350 ஏக்கர் வரையில் அகழ்த்தல் அல்லது தொல்லியல் வேலைகளுக்காக தடைசெய்திருக்கின்றார்கள் என எல்லாவெல மேத்தானந்த தேரர் சொல்கின்றார்.

இவ்வாறு தமிழர்கள் பூர்வீகமாக வாழ்கின்ற வடபுலத்தில் முல்லைத்தீவு மாட்டத்தில் தமிழர்களைக் குடியேற்றக் கூடாது என்று கூறுவதானது பௌத்த மயமாக்கலுக்கலை மிகவும் உக்கிரமான செயற்பாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கு அவர்கள் நினைக்கின்றார்கள்.

என மட்டக்களப்பு மவாட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து வெள்ளிக்கிழமை(23.06.2023) ஊடகங்களுக்குக் கருத்துது; தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இன அழிப்பு நடைபெற்றது. அதன் பின்னர் எதிர்ப்புக்கள் இல்லாத ஒரு சூழ் நிலையில் மொத்தமாக பௌத்த மயமாக்கல் செய்து வடபுலம், மற்றும் கிழக்கு புலம் போன்றவற்றில் பௌத்தத்தைக் கொண்டு செல்வதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதேவேளை அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முடியாமலிருக்கின்ற இனவாதிகள்  இந்த பௌத்த மயமாக்கல் எனும் நுட்பத்தினூடாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றார்கள்.

இந்த நாட்டை இனவாத, மதவாத ரீதியாக எரியவைத்துக் கொண்டு அந்த எரிகின்ற நெருப்பில் குளிர்காய்கின்ற போக்குகள் காணப்படுகின்றன.

கடந்த கால்ததில் இன அழிப்பு இடம்பெற்று அதற்குரிய நீதி கிடைக்கவில்லை. தற்போது குறிப்பாக கலாசார அழிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் பல இடங்களைக் குறி வைத்து பௌத்த மயமாக்கலுக்கான இடங்களாக அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். வடக்கிலும் அவ்வாறு செய்கின்றார்கள். குருந்தூர், வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பல இங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின், நெடுக்கல்மலை, குசலானமலை, மற்றும் வெல்லாவெளி பகுதியிலும் பௌத்த மயமாக்கலுக்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளானது அடுத்த தேர்தலுக்குப் போடும் ஆரவாமாகும். இது மீண்டும் நட்டமடைந்த அரசியல் பாதையை இலாபமான பாதைக்குக் கொண்டு செல்வதற்கு முயல்கின்றார்கள். 75 ஆண்டுகள் சென்றாலும் இந்த இனவாதிகள், மதவாதிகள், திருந்தக் கூடிய நிலையில் இல்லை. தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலைச் செய்துவிட்டால் அவர்கள் அடிமைகள் போல் அடங்கிக் கிடப்பார்கள், அவர்கள் அவர்களது உரிமைகளைக் கேட்பதற்குரிய எந்தவித தடையங்களும் இல்லாமல் செய்யும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதற்காக்தான் உள்நாட்டுப் பெறிமுறை ஊடாக எதுவித தீர்வும் தமிழர்களுக்குக் கிடைக்காது அது சர்வதேசத்தின் பொறிமுறை ஊடாககத்தான் இனப்பிரச்சனைத்தீர்வு, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, பௌத்தமளமாக்கல், உள்ளிட்ட பல விடையங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளார்கள். என அவர் இதன்போது குறிப்பிட்டார்.




.

SHARE

Author: verified_user

0 Comments: