24 Jun 2023

வந்தாறுமூலை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் தேர் வெள்ளோட்டம்.

SHARE

வந்தாறுமூலை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் தேர் வெள்ளோட்டம்.

கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் தேர் வெள்ளோட்ட நிகழ்வு .

வியாழக்கிழமை(22.06.2023) பக்தர்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் ஆலயத்தின் உத்தியோக பூர்வ தேரோட்ட திருவிழா எதிர்வரும் 02.07.2023 அன்று பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு பெருமானுடைய தேரோட்ட நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ திருவேட்டை விசேட உரியடி தேரோட்ட உற்சவ திருவிழா நிகழ்வு புதன்கிழமை (21.06.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பக்தர்களின் அரோகரா கோஷங்களும் மங்கள வாத்திய இசைகளோடு கொடியேற்ற நிகழ்வு பிரம்மோற்சவ பிரதம குரு சிவ ஸ்ரீ குக.அரவிந்த குருக்கள் அவர்களால் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உத்சவப் பெருவிழா எதிர்வரும் 03.07.2023 அன்று கழுவன்கேணி இந்து சமுத்திரத்தில் தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





















SHARE

Author: verified_user

0 Comments: