மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மண்முனைப்பற்று பிரதேசசபை, ஏறாவூர் நகரசபை, ஏறாவூர் பிரதேசசபை, கோறளைப்பற்று பிரதேசசபை, ஆகிய 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணி, ஜே.வி.பி, உள்ளடங்கலாக பல அரசியல் கட்சிகள் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த தேர்தல்களைவிட இம்முறை நடைபெறவுள்ள புதிய முறையிலான உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு அதிகளவு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசியல் கட்சிகளின் பிரதானிகள் தெரிவிக்கின்றனர். அதிகளவு பெண்களும், இளைஞர்களும் இந்த தேர்தலில் களமிறங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாகவுத் தெரிவிக்கின்றனர்.
கடந்த கால்தில் தேர்தலில் களமிறங்குவதற்கு வேட்பாளர்களைத் தேடி அரசியல் கட்சிகள் மிகவும் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தெரிவு செய்த நிலமை மாறி தற்போது தங்களையும் வேட்பாளர்களாக நிறுத்துங்கள் என தமது ஆதரவாளர்களுடன் வாகனங்களில் வந்திறங்கி ஆசனம் கோரிவரும் நிலமை மாறியுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பெறுத்தவரையில் முன்னெப்பபோதும் இல்லாத நிலையில் புதிதாக பல தமிழ் அரசியல் கட்சிகளும் களமிறங்கியுள்ளன. பல தமிழ் அரசியல் கட்சிகள் மக்களிடையே தங்களது வேட்பாளர்களை நிறுத்தும் வகையில் மக்கள் எந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது என்பதிலும் மிகுந்த திட்டாட்டத்தை எதிர் கொள்ள நேரிடுகின்றது. ஒரு வட்டாரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் இருவரை வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஒரு வட்டாரத்தினுள்ளே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். இவற்றாலும், மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கு அற்றுப்போய் விடுவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் யுத்த சூழலிலும், ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்ட நிலையிலும்தான் தேர்தல்கள் இப்பகுதியில் நடைபெற்ற வரலாறாகும். தற்போது அழுத்தங்கள் மிகவும் குறைவடைந்த நிலையில் ஜனநாயக முறையில் அனைவரினதும் விருப்பு வெறுப்புக்களுக்கும் இடம்கொடுக்கக் கூடிய அளவிற்கு தேர்தல் வந்திருப்பது வரவேற்கத்தக்க விடையமாகும் என அரசியல் அவதானியும் வைத்திய அத்தியட்சகருமான குணசிங்கம் சுகுணன் தெரிவிக்கின்றார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தேசியக் கட்சிகள், தமிழ் கட்சிகள். சுயேட்சைக் குழுக்கள், ஆகியோரும் போட்டியிடுகின்றனர். ஆனாலும் தம்முடைய அடிப்படைப் பிரச்சனைகள் சார்பாகவும் அபிவிருத்திகள் சார்பாகவும் செயற்படக்கூடியவர்களைத்தான் கடந்த காலத் தேர்தல்களில் தெரிவு செய்து வந்துள்ளார்கள்.
ஜனநாயக நீராட்டத்தில் யாரும் கலந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் வடக்கு கிழகக்கில் அதிகளவான சுயேட்சைக்குழுக்கும் வடக் கிழக்கிற்குச் சம்மந்தமில்லாத கட்சிகளும் போட்டியிடுவதானது ஜனநாயகத்தில் இருக்கின்ற துவாரங்களைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பிவிடுவதுவும், சமூகம் சார்ந்த பிரச்சனைகனைகளை வேறு பக்கத்திற்கு திசைதிருப்பிவிடுவதுமாக அமைந்து விடலாம். ஆனால் தமது அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பில் அதிகூடியளவு யார் பயணித்திருக்கின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் தெழிவாக இருக்கின்றார்கள் அவர்களைச் சார்ந்துதான் எதிர் வருகின்ற தேர்தலிலும் மக்கள் இருப்பார்கள்.
ஆனாலும் அபிவிருத்தியையும் வேலைவாய்ப்பையும் காரணம் காட்டி தேர்தலில் சிலர் களமிறங்குவதனால் அதில் சிலர் மத்தியில் போலியான திரும்பல் ஒன்றும் உள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையான மக்கள் தெழிவாக இருக்கின்றார்கள் என்பதை நான் அவதானிக்கின்றேன்.
எந்தக் கட்சிகளாயினும் மக்களின் காலடிக்குச் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து செயற்பட்டால்தான் எதிர்காலத்திலும் அவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம். இதில் தமிழ் மேசியக் கட்சிகள் இவ்வாறான கட்டமைப்புக்களை வளர்க்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றார்கள் என குணசிங்கம் சுகுணன் மேலும் தெரிவித்தார்.
எது எவ்வாறு அமைந்தலும் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஒரு வட்டாரத்திலிருந்து எந்தக் கட்சியிலிருந்தாவது ஒருவரைத்தான் தெரிவு செய்யப்படவுள்ளார். அவர் யார் என்பதை நன்கறிந்து தெரிவு செய்ய வேண்டியது பொதுமக்களின் பெறுப்பாகும்.
0 Comments:
Post a Comment