விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்டயுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த எவரும் பலியாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்வி டுதலைதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரையும் நான் வீடுகளுக்கு அனுப்பி வைத்தேன். அவ்வாறு அப்போது அன்றய வீரர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்காவிட்டால் அதிகளவானவர்கள் உயிரிழந்திருப்பார்கள்.
என கருணா அம்மான எனப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து அப்பாவிப் பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டதற்குக் கருணாவே காரணம் என அண்மையில் ஊடகங்களில் செய்து வெளிவந்துள்ளன. இவ்விடையம் தொடர்பில் புதன்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவவாறு குறிப்பிட்டார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
நான் யாரையும் பலவந்தமாக அக்காலப் பகுதியில் போராட்டத்திற்கு இணைக்கவில்லை, அவ்வாறு எவருடைய வீடுகளுக்கும் நான் சென்று எந்த பிள்ளைகளையும் பிடிக்கவில்லை, எனக்கும் அதற்கும் எதுவித சம்மந்தமுமில்லை. தற்போதைய தேர்தல் காலத்தில் திட்டமிட்டு சில தீய சக்திகள் இவ்வாறான பிரச்சாரங்களுக்கு பெற்றோரை உசார்ப்படுத்தி விடுகின்றார்கள்.
இதனை உண்மையிலேயே நான் முற்றாக மறுக்கின்றேன். கருணா அம்மானாகிய நான் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருத்தித்தான் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் மட்டக்களப்பிலிருந்து அப்பாவிப் பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டதற்குக் கருணாவே காரணம் என்பது தவறான தகவலாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment