12 Mar 2026

வீட்டுத் திட்டத்திற்குரிய கசோலைகள் வழங்கி வைப்பு. இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுத்திட்டத்திற்காக மாத்திரம் 355 மில்லியன் ஒதுக்கீடு – பாராளுன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு.

SHARE

வீட்டுத் திட்டத்திற்குரிய கசோலைகள் வழங்கி வைப்பு. இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுத்திட்டத்திற்காக மாத்திரம் 355 மில்லியன் ஒதுக்கீடு – பாராளுன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு.

வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளைப் அமைத்துக்; கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டு  வரப்படுகின்றன. 

ஒரு வீட்டிற்கு தலா 10 இலெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட கொடுப்பனவு 150,000 வீதம் இன்று வியாழக்கிழமை(12.03.2026) வழங்கி வைக்கப்பட்டன. 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார். 

இதன்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையார் ரி.சுபாஸ்கரன், தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பனாளிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வீட்டுத் திட்டத்திற்காக மாத்திரம் 230 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 355 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலே 6 வீட்டுத் தொகுதிகள் உருவாக்குவதற்காக 115 மில்லியன் ரூபய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாதமி பிரபு இதன்போது தெரிவித்தார்.




























 

SHARE

Author: verified_user

0 Comments: