"உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் தொனிப்பொருளில் சமூக உற்பத்தித்திறன் நாடாளாவிய மாதிரிக் கிராம திட்டம் போரதீவுபற்று புன்னங்குளம் கிராமத்தில் அங்குரார்ப்பணம்.
இதன்போது, பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் , சமூக உற்பத்தி திட்டம் பற்றிய காணொளி இடப்பட்டதை தொடர்ந்து , 50 பயனாளிகளுக்கு எதிர்கால சமூக உற்பத்தி திட்ட கையேடுகளும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் போரதீவுபற்று உதவிப் பிரதேச செயலாளர் சி.கமல்ராஜ் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் , பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதி ம.மனோதினி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





















0 Comments:
Post a Comment