பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக மன்முனை
தென்மேற்கு பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு – பா.உ கந்தசாமி பிரபு.
பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழிக்கும் முகமாக பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரப்படுகின்றன. அந்த வகையில் நெல் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதி கூடுதலாக காட்டு யானை தாக்குதலுக்கு
பாதிக்க ப்படுவதால் சூரிய சக்தி மூலம் வீதியோர விளக்குகளை ஒளிர செய்வதற்காக 5 மில்லியன்
ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மற்றும் இப்பிரதேசத்தில் உள்ள பொது மயானங்கள் மற்றும் பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் தாந்தாமலை பிரதான வீதிக்கு 10 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் வெள்ளிக்கிழமை(14.03.2026) பிற்பகல் நடைபெற்ற அப்பகுதி பிரதேச பிரஜா சக்தி உறுப்பினர்களுடனான அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக ஊழியர்கள், அப்பிரதேச பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment