15 Mar 2026

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

SHARE

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரண்டு வீட்டு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுவது தொடர்பில் பயனாளிகளுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (13.03.2026) இலுப்படிச்சேனை நாவல்தோட்டம் கிராமத்தில் இடம்பெற்றது. 

பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் த.சுபாஸ்கரன் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள், வீடமைப்பு அதிகார சபையின் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 40 வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து திட்டங்களும் மிகுதி பணம் வழங்காத காரணத்தினால் இடைநடுவில் அத்திட்டம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இதுவரையில் காணப்படுகின்றது.

தற்போது மகிழவட்டவான் மற்றும் நாவல் தோட்டம் ஆகிய கிராமங்களிலுள்ள இரண்டு திட்டங்களிலும் சுமார் 50 வீடுகள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான ஆரம்ப கூட்டமும் மக்கள் சந்திப்பும் இதன்போது இடம்பெற்றது. இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஒரு வீட்டுக்கு முன்னைய அரசாங்கம் 7 இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்குவதாக கூறியிருந்தனர். தற்போது 10 இலட்சம் ரூபாய் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








 

SHARE

Author: verified_user

0 Comments: