எமது மண்ணையும், மக்களையும், தங்களது உயிரினும் மேலாக நினைத்துத்தான் இந்த மாவீரர்கள் விடுதலைப் பாதைக்கு வழிதிறந்ததை நாம் ஒருபோதும் மறக்கக்மாகமல் அவர்களுக்குத் தலைவணங்க வேண்டும். எனவே எந்த தடைகள் வந்தாலும் மாவீரர்களின் நினைவுகளை எமது மனங்களிலிருந்து மாற்றவும் முடியாது, மாற்றவும், முடியாது என என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா தெரிவித்தார்.
திங்கட் கிழமை (27) மாலை மட்டக்களப்பு மாவடிமுன்மாரியில் அமைந்தள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் ஈகைச் சுடர் ஏற்றி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
கடந்த காலத்தில் இருந்த அரசு மாவீரர் நாளை அனுஸ்ட்டிப்பதற்கு தடைவித்தித்திருந்தது. இந்நிலையில் எமது மண்ணின் விடிவுக்காகப் போராடி உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர இக்காலத்தில் ஓரளவுக்காவது சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
இருந்த போதிலும் சில சிங்களப் பேரினவாதிகள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, மாவீரர் துயிலுமில்லங்களை இராணுவ முhகாம்களாக மாற்றியிருந்தது. இந்நிலையில் எமது அரசியல் தலைவர்களின் முயற்சியினால் ஒருசில மாவீர துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் சில மாவீரர் துயிலுமில்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எமது மண்ணையும், மக்களையும், தங்களது உயிரினும் மேலாக நினைத்துத்தான் இந்த மாவீரர்கள் விடுதலைப் பாதைக்கு வழிதிறந்ததை நாம் ஒருபோதும் மறக்காமல் அவர்களுக்குத் தலைவணங்க வேண்டும். எனவே எந்த தடைகள் வந்தாலும் மாவீரர்களின் நினைவுகளை எமது மனங்களிலிருந்து மாற்றவும் முடியாது, மாற்றவும், முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment