19 Dec 2025

மட்டக்களப்பில் மீண்டும் பலத்த மழை தாழ் நிலங்கள் வெள்ளத்தில் இவ்வருடத்தில் 1809.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

SHARE

மட்டக்களப்பில் மீண்டும் பலத்த மழை தாழ் நிலங்கள் வெள்ளத்தில் இவ்வருடத்தில் 1809.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு. 

வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கிக்கிடப்பதையும், அவ்வாறு தேங்கியுள்ள வெள்ளநீர் முறையான வடிகானின்றி வழிந்தோட முடியாமலுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் கிராமங்களின் உள் வீதிகளில் இவ்வாறு வெள்ள நீர் தேங்கிக் கிடப்பதனால் பொதுமக்களும். மாணவர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றர். 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 1809.5 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (19.12.2025) காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் நவகிரிப் பகுதியில் 19 மில்லி மீற்றர், தும்பங்கேணி பகுதியில் 32 மில்லி மீற்றர், மைலம்பாவெளி பகுதியில் 53.5 மில்லி மீற்றர், கட்டுமுறிவு பகுதியில 42 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. 

இந்நிலையில் மாவட்டத்திலுள்ள பழுகாமம், வெல்லாவெளி, வவுணதீவு, பட்டிப்பளை, களுதாவளை. களுவாஞ்சிகுடி, குருமண்வெளி, உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிகின்றன. 

இதேவேளை உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 4அங்குலம்,  உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16அடி இக்குளத்தில் மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது, வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம 19அடி, கட்டுமுறிவுக்குளத்தின் நிர்மட்டம 11அடி 8அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம 15அடி 6அங்குலம், வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 7அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 






















SHARE

Author: verified_user

0 Comments: