மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில்
சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் மக்களுக்கான சேவையை நேர்த்தியாகவும், திருப்தியாகவும், மேற்கொண்டுவரும் அரச உத்தியோகத்தர்கள் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் வியாழக்கிழமை(18.12.2025) பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச சபையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சேவையை சிறப்பாக மேற்கொள்ளும்
உத்தியோகத்தர்கள் தவிசாளரினால் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)



0 Comments:
Post a Comment