மட்டக்களப்பில் பிரசித்தி பெற்று விளங்குகின்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்ற திருப்பாவை பூசை நிகழ்வானது இந்த வருடமும் மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
திருப்பாப்பூசை நிகழ்வானது மார்கழி மாதம் தமிழுக்கு முதலாம் நாள் மார்கழி மாதம் 16 ஆம் திகதி அதிகாலை வேளையில் முதல் நாள் பூசை ஆரம்பமாகி எதிர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு 16ஆம் தேதி தீர்த்தத்துடன் நிறைவடையும்
வந்தாறுமூலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் இந்த திருப்பாவை பூசை சிறப்பாக 30 நாட்களும் 30 குடும்பங்களுக்கான பூசையாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்தாரின் பூசையாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி இந்த விரத நிகழ்வோடு ஒட்டியதாக சுவர்க்கவாயில் வைகுந்த ஏகாதசி விரதமும் இங்கே நடைபெறுவது ஒரு சிறப்பம்சமாகும் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதத்தோடு ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பணி எழுச்சி பாடப்பட்டு கண்ணன் பஜனை குழுவினரின் பஜனையோடும் பின் பூசை நிகழ்வுகளோடு தொடர்ச்சியாக திருப்பாவை 30 பாடல்களும் பாடப்பட்டு வெகு சிறப்பாக நடைபெறுவது மிகவும் ஒரு சிறப்பான அம்சமாகும்.








0 Comments:
Post a Comment