1 Dec 2017

50000 மாவீரர்கள் ஆகுதியாக்கப் பட்டுள்ளார்கள்-அரியநேத்திரன்.

SHARE
1982 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 20 ஆம் திகதி வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உத்தியோக பூர்வமாக 18746 மாவீரர்கள் இந்த மண்ணுக்காக ஆகுதியாகியிருந்தார்கள். 
ஆனால் உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை மொத்த எண்ணிக்கையாக 50000 மாவீரர்களை இந்த மண்ணிலே ஆகுதியாக்கியிருக்கின்றோம்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்யப மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்கள் உறங்கும் இடங்களில் ஒன்றாகக் காணப்படுவது மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் திங்கட் கிழமை மாலை ஈகைச் சுடர் ஏற்றி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவவ்வாறு குறிப்பிட்டார் அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்….

கடந்த காலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சென்று மாவீரர்களை நினைவு கூருவதற்கு தடைவிதிக்கப் பட்டிருந்தன. அத்தோடு அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களையும் ஸ்ரீலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்தது. அதுபோல் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு அருகில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தர்கள். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் தற்போதும் இலங்கை இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கின்றார்கள். வாகரை கண்டலடியில் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த இராணுவம் சற்று தற்போது விலகியிருக்கின்றது. தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் நிலை கொண்டிருந்த இராணுவமும் அதனை தற்போது விடுவித்துள்ளது. இவ்வருடம் மட்டக்கள்பு மாவட்டத்தில் 3 மாவீரர் துயிலுமில்லங்களில் சுதந்திரமாக மாவீரர்களுக்கு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப் படுகின்றது.

1982 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 20 ஆம் திகதி வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உத்தியோக பூர்வமாக 18746 மாவீரர்கள் இந்த மண்ணுக்காக ஆகுதியாகியிருந்தார்கள். 

ஆனால் உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை மொத்த எண்ணிக்கையாக 50000 மாவீரர்களை இந்த மண்ணிலே ஆகுதியாக்கியிருக்கின்றோம். எமது பெற்றோர்கள் எமது மண்விடுதலைக்காக தங்களது பிள்ளைகளைத் தந்துள்ளார்கள். மாவீர்கள் போராடிய கனவை நாங்கள் இன்னுமே அடைய முடியாமல் இருந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை எந்தவொரு மாவீரர் துயிலுமில்லத்திலும் ஈகைச் சுடர் ஏற்ற முடியாத நிலையிருந்து வந்துள்ளது. 

கடந்த வருடம் கார்த்திகை 27 ஆம் திகதி வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஈகைச் சுடர் ஏற்றப்படிருந்தன. ஆனால் நான் அப்போழுது தனியாக வந்து இந்த மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் விளக்கேற்றியிருந்தேன் அப்போது இந்து பற்றைக் காடாக காணப்பட்டது. 

மாவீரர்களின் விட்டுச் சென்ற கனவை நாங்கள் தொட்டு அந்த கனவு என்றோ ஓர் நாள் நிறைவேறும்வரை நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: